2027ஆம் ஆண்டு MADANI வரவு செலவுத் திட்டம், அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் சமூக நீதியை உறுதிப்படுத்தவும் உருவாக்கப்பட்டதே !
பெரிய அளவிலான லாபங்களையோ, முக்கியத் துறைகளை மட்டும் கவனத்தில் கொண்டோ அமைக்கப்பட்டதல்ல என, பிரதமர் தெரிவித்துள்ளார்.
வளர்ப்பு பிராணி உரிமையாளர்கள், மாற்றுத்திறனாளிகள், கிக் தொழிலாளர்கள், உணவு விநியோகிப்பவர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் வகையிலே 2027 பட்ஜெட் அமைந்துள்ளது என பிரதமர் விளக்கினார்.
என்றாலும், அனைத்து பிரச்சினைகளுக்கும், வரவு செலவுத் திட்டம் மட்டுமே ஒரு தீர்வாக அமைந்து விடாது என நிதியமைச்சருமான அவர் கூறினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டு மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதே அடுத்தாண்டு பட்ஜெட் அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் என பிரதமர் வலியுறுத்தினார்.
--
இவ்வேளையில், மானிய விலையில் வழங்கப்படும் RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னாகவே தொடர அரசு முடிவு செய்துள்ளது!
உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்தாலும், மக்களின் நலன் மற்றும் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு அம்முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் கூறினார்.
நேற்று, 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறித்த சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் பிரதமர் அதனைத் தெரிவித்தார்.
--
சுற்றுச்சுழல் துறையின் ஆகக் கடைசி தகவல் படி, நாட்டில் 14 இடங்களில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது!
மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஜொகூர் உள்ளது.
பாசிர் கூடாங், லார்கின், கோத்த திங்கி, தங்காக், சிகாமாட், பத்து பஹாட், குளுவாங் என ஜொகூரில் மட்டுமே எட்டு இடங்களைப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.
--
இவ்வேளையில், ஜொகூரில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதை, நாளை தொடங்கி 5 நாட்களுக்கு நீட்டித்துள்ளது மாநில அரசு.
அம்மாநிலத்தில் காற்றின் தரம் மோசமடைந்திருப்பதை அடுத்து , ஜொகூர் மாநில பட்டத்து இளவரசர் ஆணையின் அடிப்படையில் அது முடிவாகியுள்ளது.
--
Saudi அரேபியா ரியாத்தில் உள்ள King Khalid அனைத்துலக விமான நிலையத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என மலேசிய வெளியுறவு அமைச்சு Wisma Putra உறுதிபடுத்தியுள்ளது.
அச்சமவத்தில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.