Skip to main content
SARA உதவித்தொகையைப் பயன்படுத்தி விடுங்கள் !

நாடு முழுவதும் வழங்கப்பட்ட SARA உதவித் தொகையில், இதுவரை கிட்டத்தட்ட முழுத் தொகையும் செலவிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெறுநர்கள் பயன்படுத்த வேண்டிய தொகையில், இன்னும் 5 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் அமைச்சு கூறியது.

STR மற்றும் SARA உதவித் திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடு, 15 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து அடுத்த ஆண்டு 16 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்படாத SARA உதவித் தொகையை, வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் செலவிட வேண்டும்.

எஞ்சிய தொகையை அடுத்த ஆண்டுக்குக் கொண்டு செல்ல முடியாது என அமைச்சு நினைவூட்டியது.

--

 

பேரிடர் நிவாரணப் பணிகளில் உதவும் சமூக நலத் தன்னார்வலர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் allowance வழங்கப்படும் என மகளிர், குடும்ப, சமூக நல மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

--

இதனிடையே,  பேராக் சிலாங்கூர் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2300 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு துயர்துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

--

பேராக் Bidor வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில், காவல்துறையினர் பயணித்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த வேனின் டயர் வெடித்ததால் அவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என  சந்தேகிக்கப்படும் வேளை, மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். 

--

சிலாங்கூர் Kuala Kubu Bharu-வில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் காணாமல் போன கடைசி நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

அச்சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அச்சம்பவத்தில், எண்மர் காணாமல் போனதோடு உயிரிழந்த நிலையிலே கண்டெடுக்கப்பட்டனர்.

--

வெளிநாட்டு உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் அண்மையில் பதவி விலகினார்.

இந்நிலையில், அவரை மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கக் கோரும் பிரசாரத்தை என்விடியா நிறுவனம் நிராகரித்துள்ளது.

 

RAAGA Aaha Siranta Isai!