Skip to main content
SMART குழு இன்று நேபாளம் செல்கிறது !

மலேசிய சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு SMART இன்று நேபாளத்திற்குப் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நேபாளம் சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பேரிடர்களை அடுத்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ, மலேசியா நேபாள அரசாங்கத்திடமிருந்து அதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற்றது.

 

முன்னதாக, நேபாளம் வெளிநாடுகளின் உதவிகளை நிராகரித்திருந்தது.

--

நேபாளம்-சீனா பெருவெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கிக் கொண்ட 55 மலேசியர்கள் இன்னும் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளனர்.

அதில் சிக்கிக் கொண்ட மலேசியர்கள் குறித்த தகவல்கள் பெறும் முயற்சியில், Wisma Putra சீன அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது.

அச்சம்பவம் நிகழ்ந்து இன்றோடு பதினொரு நாள்கள் ஆகின்றன.

--

தலைநகர் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில், கடந்த மாதம் நால்வரை பலிகொண்ட கோர விபத்தைத் தொடர்ந்து, குடிநுழைவு துறை தனது வாகனங்களின் தக்க தர செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து உள் விசாரணை ஒன்றை நிகழ்த்தி வருகிறது.

விசாரணை அறிக்கை இன்னும் பெறப்படாத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையைக் காவல்துறையிடம் விட்டுவிடுவதாகவும் அத்துறை தெரிவித்துள்ளது.

--

26,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, தேசிய உயர் கல்வி நிதி நிறுவனம் தலா 1,500 ரிங்கிட் கல்விக் கடன் உதவியை முன்பணமாக வழங்கவுள்ளது.

அதற்காக சுமார் 40 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக PTPTN சொன்னது.

--

சுற்றுச்சூழல் துறையின் ஆகக் கடைசி தகவல் படி, சரவாக்கில் 9 இடங்களிலும், சபாவில் Politeknik Kota Kinabalu, லாபுவன் உட்பட 4 இடங்களிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் இருக்கிறது.

சமரஹான் , கூச்சிங், ஸ்ரீ அமன் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது.

ஆக அதிகமாக, சரவாக் செரியானில் API குறியீடு 355 ஐ காட்டுகிறது.

இதனிடயே, தீபகற்பத்தில் ஜொகூர் Batu Pahat, Larkin, Kluang, Tangkak, Segamat, Pasir Gudang, kota Tinggi,சிலாங்கூரில் Johan Setia,  பஹாங் ரொம்பின், NS நீலாய், மலாக்காவில் Bukit Rambai Alor Gajah ஆகிய பகுதிகளும் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

RAAGA Aaha Siranta Isai!