Skip to main content
SPM மாணவர்கள் பாதுகாக்கப்படுவர் !

 

வடகிழக்குப் பருவமழை காலத்தில், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில், SPM தேர்வெழுதும் மாணவர்கள், Operasi Payung எனப்படும் சிறப்பு நடவடிக்கை மூலம் பாதுகாக்கப்படுவர் !

அவர்கள், சிரமமின்றித் தேர்வெழுவதற்கு வசதியாக, ஆண்டுத்தோறும் மேற்கொள்ளப்படும் அந்த நடவடிக்கையை, கல்வியமைச்சு இவ்வாண்டும் முன்னெடுத்துள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான SPM எழுத்துத் தேர்வுகள், இம்மாதம் 23-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், நடப்பிலிருக்கும் வடகிழக்குப் பருவமழை, அடுத்தாண்டு மார்ச் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

---------

ஜொகூர் Pasir Gudang-கில், ஐந்து ஆடவர்கள், பாராங்கத்தியைக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்ட சம்பவத்துக்குப், பொறாமையே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது !

அச்சம்பவத்தில் கடுமையான காயத்திற்குள்ளான நபர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

-------

37.3 டன் எடையிலான பல்வேறு வகை போதைப்பொருட்கள், சிலாங்கூர் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையால் அழித்தொழிக்கப்பட்டுள்ளன !

அந்தப் போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு, 1.71 பில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

----------

இவ்வாண்டு முதல் 10 மாதங்களில், தாய்லாந்துக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 4.59 விழுக்காடு குறைந்து, 2 கோடியே 54 லட்சத்து 60 ஆயிரமாகப் பதிவாகியுள்ளது !

இதனிடையே, தாய்லாந்துக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில், 42 லட்சத்து 40 ஆயிரம் பயணிகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து, மலேசியா 32 லட்சத்து 30 ஆயிரம் பயணிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

---------

Astro, தனது 30-வது ஆண்டு நிறைவையொட்டி, ஒன்றிணைந்து கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில், தீபாவளிக்காக 75 மணி நேர சிறப்புப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது!

உள்ளூர் தயாரிப்புகள், புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன், Sony விழா அலைவரிசை 220 எனும், புதிய தமிழ் பொழுதுபோக்கு அலைவரிசையையும் Astro அறிமுகப்படுத்தியுள்ளது.

ராகா மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், தீபாவளிக்கான சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடவடிக்கைகளையும் Astro வழங்குகிறது. 

RAAGA Aaha Siranta Isai!