
STR மாதாந்திர உதவித் தொகையைப் பெறும் 90 லட்சம் மலேசியர்களில் 99 விழுக்காட்டினர், ரஹ்மா அடிப்படை உதவித் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்!
இவ்வாண்டு மட்டும் அத்திட்டத்தின் கீழ் மூன்று புள்ளி 45 பில்லியன் ரிங்கிட் செலவிடப்ப்பட்டிருப்பதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
STR மற்றும் சாரா உதவித் திட்டங்கள் மக்களிடையே எவ்வளவு பயன்படுத்தப்படுகின்றது என்பதைப் பொறுத்தே, அதன் மூலம் வாழ்க்கைச் செலவீனத்தைக் குறைக்கும் அரசாங்கத்தின் இலக்கு கைகூடுகிறது.
இந்நிலையில் அவ்விலக்கு எட்டப்பட்டது மட்டுமின்றி, உள்நாட்டு பொருளாதாரமும் இதனால் உயர்ந்திருப்பதாக அவ்வமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
-----
இதனிடையே 15ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான இரண்டாவது கூட்டத் தொடர், 16 நாட்களுக்குப் பிறகு நிறைவுப் பெற்றுள்ளது!
இக்காலகட்டத்தில் சாலை போக்குவரத்துச் சட்ட மசோதா, சிறாருக்கு எதிரான பாலியல் குற்றச்சட்ட மசோதா என, மொத்தம் 13 சட்டமசோதாக்கள் அங்கீகரிக்கப்பட்டன.
------
நாளை நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்காக ஈராயிரத்து முன்னூரு காவல் வீரர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்!
அவர்கள் நாளைய தினம் வேட்புமனுத் தாக்கல் பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதிச் செய்வர்.
----
இதனிடையே நெகிரி செம்பிலானின் 16ஆவது மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தொடர்புத்துறை அமைச்சும், மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையமும் அம்மாநிலத்தில் மூன்று ஊடக மையங்களைத் திறக்கவுள்ளன!