Skip to main content
Sultan Ismail சாலை விபத்து ; மரணித்த மூவர் அடையாளம் !

 

தலைநகர் Sultan Ismail சாலையில், குடிநுழைவுத் துறை லாரியால் அடிப்பட்ட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் !

அவர்கள், பேராக் கம்பாரைச் சேர்ந்தவர்களாவர் என, KL போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான நடைபாதைப் பகுதியிலேயே நின்றுகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை, குடிநுழைவுத் துறை லாரி மோதியது.

அதில், தந்தை மற்றும் இரு மகள்கள் என, மூவர் உயிரிழந்தனர்.  

தாய், படுங்காயத்துக்கு ஆளாகினார்.  

அவர்கள் சுற்றுலாக் கழிக்க தலைநகருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றார்.

அச்சம்பவம் தொடர்பில், குடிநுழைவுத் துறை, உடனடியாகவும் முழுமையாகவும் விசாரணை நடத்த வேண்டும் என, பிரதமர் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

--------

தலைநகர் Brickfields-சில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சுமார் 80 கிலோகிராம் methamphetamine மற்றும் 30 கிலோகிராம் ecstasy போதைப்பொருள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன !

இந்நடவடிக்கையில், 36 வயதான வெளிநாட்டு ஆடவர் ஒருவரும் கைதானார்.

---------

KLIA Terminal ஒன்றில், அமைதிக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் மனநல சிகிச்சைக்காக, காஜாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் !

அந்த சீன நாட்டுப் பெண், சீன மொழியில் சத்தமாகக் கத்தியதுடன், அங்குமிங்கும் ஓடியும், பாடியும், நடனமாடியும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவிக்கபட்டுள்ளது.

---------

சரவாக்கில் 7 பகுதிகளில், காற்றின் தரம், 120-க்கும் மேல் பதிவாகி, ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது ! 

RAAGA Aaha Siranta Isai!