
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq மீதான வழக்கில், அரசு தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பை, கூட்டரசு நீதிமன்றம், ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது !
அர்மடா நிதி தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளில் Saddiq-குக்கு வழங்கப்பட்ட விடுதலைத் தீர்ப்பை எதிர்த்து, அரசு தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது.
இந்நிலையில், இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை வகித்த நீதிபதி ஒருவர், மருத்துவ விடுப்பு காரணமாக வராததால், அத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
--------
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்களுக்கான சட்டத்திருத்தங்களை, மக்களவை நிறைவேற்றியுள்ளது !
அச்சட்டத் திருத்தம், வெளிநாட்டில் அக்குற்றம் நிகழ்ந்தாலும், குற்றம் புரிபவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்க வகை செய்யும்.
---------
உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய மலேசியக் கடப்பிதழ், இன்று பிரதமர் அறிமுகப்படுத்தியதையடுத்து, நாளை முதல் கட்டமாக நடைமுறைக்கு வரவுள்ளது !
ஆயினும், பொதுமக்கள் தங்கள் தற்போதைய கடப்பிதழை உடனடியாக மாற்ற அவசரப்பட தேவையில்லை ; தற்போதுள்ள கடப்பிதழ், அதன் காலாவதி தேதிக்கு இன்னும் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு குறைவாக உள்ள வரைக்கும் பயன்படுத்தலாமென, குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
---------
தாய்லாந்து Tak Bai பகுதியில், சாலை ஓரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இரு மலேசியர்கள், மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் !
அவர்கள் தற்போது தாய்நாட்டில் திரும்பி தொடர்ந்து சிகிச்சை பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.