
T நவீன் கொலை வழக்கு ஒருவழியாக விசாரணைக்கு வருகிறது!
பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த அவ்வழக்கின் விசாரணை தேதிகளை அக்டோபர் 7லிருந்து ஒன்பது மற்றும் 12லிருந்து 16ஆம் தேதி வரை நிர்ணயித்துள்ளது உயர் நீதிமன்றம்.
நவீன் கொலை வழக்கில் கைதான நால்வரின் விசாரணை தேதிகளை இவ்வாண்டு அக்டோபர் மாதம் நிர்ணயித்துள்ளது உயர்நீதிமன்றம்.
அவ்வழக்கு தொடர்பில் நால்வர் மீது முன்னதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
2017ஆம் ஆண்டு கும்பல் ஒன்றால் அடித்துத் துன்புறத்தப்பட்டு, கொடூரமான முறையில் நவீன் கொலை செய்யப்பட்ட செய்தி நாட்டையே உலுக்கியது நினைவிருக்கலாம்.
-----
டீசலுக்கான உதவித் தொகை தரை போக்குவரத்து துறைக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது!
நிறுவனங்கள் வைத்திருக்கும் தனியார் ஜீப்புகளும் pick up- truck வாகனங்களும் அதற்கு விண்ணப்பிக்கலாம் என, உள்நாட்டு வாணிப வாழ்க்கைச் செலவீன அமைச்சு தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், இம்மாதம் 15ஆம் தேதிக்கு மேல் டீசல் உதவித் தொகைக்குத் தகுப் பெறுவர்.
-----
TVET தொழிற்பயிற்சிக் கல்விக்கான தேவை மலேசியர்களிடையே அதிகரித்த வண்ணாமே இருக்கிறது!
தொழிற்கல்வியை வளர்த்துக் கொள்ள பல்வேறு திட்டங்களையும் உதவிகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும், அதனைப் பயன்படுத்தி மக்கள் பயனடை வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் மனிதவள அமைச்சர் DS Ramanan Ramakrishnan.
செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த MyFutureJobs தளமானது, விண்ணப்பதாரரின் திறன் மற்றும் அனுபவத்தைக் கொண்டு, அவருக்கு ஏற்ற வேலையை அதுவே பரிந்துரைக்கும்
------
மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவு மித்ரா அறிமுகப்படுத்திய உயர்வு மடானி உதவித் திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது!
வெறும் ஐந்தே நாட்களில் ஆயிரத்து முன்னூருக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மித்ரா தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்,
சிறு,குறு நடுத்தர வியாபாரிகளுக்கு உதவும் நோக்கில், இந்த உயர்வு மடாநி திட்டத்தின் கீழ் தகுதியைப் பொறுத்து ஐம்பதாயிரம் ரிங்கிட் வரையில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
-----
திரங்காணு, பஹாங் மற்றும் ஜொகூரில் சில இடங்களில் இன்று இரவு ஏழு மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, MetMalaysia கணித்துள்ளது.