Skip to main content
தேவைக்கு அதிகமாக அரிசியை வாங்க வேண்டாம் !

தேவைக்கு அதிகமாக அரிசியை வாங்க வேண்டாம் ! 

அவ்வாறு விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

நாட்டில் உணவுப் பொருட்களின் விநியோகம் சீராகவே உள்ளது. 

நடப்பு விலையில் அரிசிக்கு குறைந்தபட்சம் இவ்வாண்டு இறுதி வரை எந்தப் பிரச்சினையும் இருக்காது. 

மத்தியகிழக்கு போரால், ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் பயத்தில் சென்று பொருட்களை வாங்குவது, போதுமான விநியோகம் இருந்தாலும், பற்றாக்குறை உள்ளது மாதிரியான தோற்றத்தை உண்டாக்கும் என அமைச்சு கூறியது. 

-- 

இவ்வேளையில், நாட்டில் இப்போதைக்கு மீன் விநியோகம் பாதிக்கப்படவில்லை என மீன்வளத் துறை தெரிவித்துள்ளது. 

அரசாங்கத்தின் எரிபொருள் மானியங்களின் உதவியுடன் மீன்பிடிக் கப்பல்களின் செயல்பாடுகள் வழக்கம் போல் இயங்கி வருவதாக அத்துறை கூறியது. 

எரிபொருள் விலை உயர்வால் ஆழ்கடல் மீனவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒருவேளை, நிலைமை மோசமடைந்து, கப்பல்களால் முழுமையாகச் செயல்பட முடியாமல் போனாலும், நடப்பு கையிருப்பு மூன்று மாதங்களுக்கு தேவைகளைப் பூர்த்திசெய்யும் அத்துறை  கூறியது. 

-- 

அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து வேலைச் செய்யும் முறையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது ! 

ஊழியர்களின் உற்பத்தித் திறன் குறையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

-- 

இஸ்ரேலின் தாக்குதல்களால் லெபனானில் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், அங்குள்ள மலேசிய அமைதிப்படையினரை பாதுகாக்கும் வண்ணம் வெளியுறவு அமைச்சு ஐ.நா.வைச் சந்திக்கவுள்ளது. 

-- 

சிலாங்கூர், Puncak Jalil-லில் நேற்று ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டவிட்டதாகவும், அதில் உயிருடற்சேதம் ஏதுமில்லை என்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. 

-- 

RAAGA Aaha Siranta Isai!