
ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலையம் மதத்தை அவமதிக்கவில்லை!
பிரதமர் DSAI மற்றும் France அதிபர் Emmanuel Macron-னின் வருகையின் போது ஆலைய நிர்வாகம் ஆலையத்தையும் மதத்தையும் அவமதிக்கும் விதமாக நடந்துக் கொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தேவஸ்தான தலைவர் Tan Sri R Nadarajah திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களும் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி அந்த அட்டவணையிடப்படாத வருகையை மேற்கொண்டதால், ஆலைய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துரைக்க ஆலைய நிர்வாகத்தினர் அங்கில்லை என அவர் கூறினார்.
அவர்கள் ஆலைய வளாகத்தில் காலணி அணிந்தது குறித்து மலேசிய இந்து சங்கமும், மலேசிய இந்து தர்ம மாமன்றமும் கேள்வி எழுப்பியதை அடுத்து, நடராஜா அவ்வாறு விளக்கமளித்தார்.
அதோடு அவர்கள் சன்னிதானத்திற்கு உள்ளே காலணி அணிந்து வரவில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தியிருந்தார்.
------
உயர்வு மடானி 2.0 திட்டத்தின் கீழ் இதுவரை எட்டாயிரத்து முன்னூரு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சிறு, குறு, நடுத்தர வியாபாரங்களுக்கு நிதியுதவி வழங்கி, அவர்களின் வருமானத்தை உந்தச் செய்யும் நோக்கிலான அத்திட்டம் எதிர்ப்பார்த்ததை விட அதிக விண்ணப்பத்தை பெற்று வருவதாகக் கூறினார் மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவு மித்ராவின் தலைமை இயக்குனர் K Ravinthiran Nair.
விண்ணப்பங்களை இறுதிச் செய்யும் வேலைகள் இடம்பெற்று வரும் வேளை, தகுதிப் பெற்ற விண்ணப்பதாரர்கள் விரைவில் தொடர்புக் கொள்ளப்படுவார் என்றார் அவர்.
-------
பேராவில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்றில் மூன்றாம் படிவ மாணவர் இறந்த சம்பவம் தொடர்பில் ஆழமான விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்!
நியாயம் நிலைநாட்டப்பட ஏதுவாக, துல்லியமான வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.
-------
இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு தீபகட்பத்தில் ரோன் 97 ரக பெட்ரோல் விலை 20 சென் குறைகிறது!
உதவித் தொகை வழங்கப்படாத ரோன் 95 மற்றும் டீசல் விலை முறையே 15 சென் குறைவதாக நிதியமைச்சு அறிவித்தது.
-------
திரங்காணு, பஹாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்காவில் கனமழை எச்சரிக்கை!
அம்மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை , இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என MetMalaysia கணித்துள்ளது.