Skip to main content
தீச்சம்பவம் எண்ணிக்கை அதிகரிப்பு !

 

நாடு முழுவதும் திறந்தவெளியில் தீப்பற்றும் அபாயம் மற்றும் பெரிய அளவிலான தீ ஏற்படும் வாய்ப்புள்ள இடங்களை, தீயணைப்புத் துறை கண்காணித்து வருகிறது !

இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், நாடு முழுவதும் 18-ஆயிரத்துக்கும் அதிகமான காட்டுத் தீ, புதர்த் தீ மற்றும் குப்பைத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில், கிட்டத்தட்ட 10-ஆயிரம் சம்பவங்கள் மட்டுமே பதிவான நிலையில், இவ்வாண்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அத்துறை தெரிவித்துள்ளது.  

இதனிடையே, Super El Nino பருவத்தின் போது ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, Bomba கூறியது.

அடுத்தாண்டு ஜனவரியின்  மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில், மலேசியாவில் அப்பருவம் நிலவலாம் என அது சொன்னது.

--------

சூதாட்டம் மற்றும் மோசடி தொடர்பான உள்ளடக்கங்கள் அதிகம் காணப்படும் முக்கிய சமூக ஊடகத் தளமாக முகநூல் இருப்பதாக, தொடர்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது !

முகநூல், இணையவழி சூதாட்ட உள்ளடக்கங்களில் 78 விழுக்காட்டுக்கும், மோசடி உள்ளடக்கங்களில் 53 விழுக்காட்டுக்கும் பங்களிப்பதாக, அமைச்சு கவலை தெரிவித்தது.

இதனிடையே, ஜனவரி 1-ஆம் தேதி முதல், நேற்று வரை, சூதாட்டம் மற்றும் மோசடி தொடர்பிலான, 4 லட்சத்து 70-ஆயிரத்துக்கும் அதிகமான உள்ளடக்கங்களை நீக்கும்படி கோரப்பட்டதாகவும், அவற்றில் 93 விழுக்காட்டு உள்ளடக்கங்களை நீக்க சம்பந்தப்பட்ட தளங்கள் ஒப்புக்கொண்டதாகவும், அவ்வமைச்சு கூறியது.

---------

2026-ஆம் ஆண்டுக்கான SPM எழுத்துத் தேர்வுகள், நவம்பர் 23 முதல் டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறும் !  

இவ்வாண்டுக்கான SPM தேர்வின் முழுமையான அட்டவணையை, தேர்வுத் துறை விரைவில் வெளியிடும்.  

--------

நெகிரி செம்பிலான் சட்டமன்ற சபாநாயகராக, Datuk Seri Dr Awaludin Said, இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார் !

--------

இலங்கையில், 55 வயது நபரின் சிறுநீர்ப்பையில் இருந்த, 3.1 கிலோ எடையுள்ள கல் ஒன்றை, மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர் !

அந்தக் கல், முழுமையான கர்ப்பக் காலத்தைக் கடந்த குழந்தையின் எடைக்கு சமமாகவும், நெருப்புக்கோழி முட்டையின் அளவிலும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

RAAGA Aaha Siranta Isai!