Skip to main content
டீசல் உதவித் தொகை தகுதி குடும்பத்திற்கும் !

 

Budi Madani திட்டத்தின் கீழ் தகுதி பெறும் தனியார் டீசல் வாகன உரிமையாளர்கள், தங்கள் டீசல் உதவித் தொகை தகுதியை, நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர் !

வாகன உரிமையை மாற்றாமல், உதவித் தொகை உண்மையான பயன்பாட்டாளருக்கே சென்றடைய வேண்டும் எனும் நோக்கில், இந்த வசதி வழங்கப்பட்டுள்ளதாக, உள்நாட்டு வாணிப, வாழ்க்கை செலவீன அமைச்சு தெரிவித்துள்ளது.

கணவன்/மனைவி, பிள்ளைகள், பெற்றோர் அல்லது சகோதரர்–சகோதரிகள் போன்ற நெருங்கிய உறவினர்கள், அந்த வாகனத்தை முழுமையாக பயன்படுத்தும் நிலையில், அது, வாகன உரிமையாளர் பெயரில் இருந்தாலும், தகுதி மாற்றம் செய்யலாம் என்றும் அது விளக்கியது.

---------

MyLesen B2 திட்டத்தின் கீழ் பெறப்படும் மோட்டார் சைக்கிள் உரிமம், பந்தயத்தில் ஈடுபடுவதற்கான அனுமதி அல்ல என, போக்குவரத்து அமைச்சர் நினைவூட்டியுள்ளார் !

மாறாக, அந்த உரிமத்தை பொறுப்புடனும், கவனமாகவும் பயன்படுத்தி, போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வோராண்டும் நாட்டில் சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களில், சுமார் 60 விழுக்காடு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களை உட்படுத்தியதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

---------  

தாய்லாந்தில், 11 வயது சிறுவன், தனது பெற்றோருக்குச் சொந்தமான பிக்கப் ரக வாகனத்தை ஓட்டிச் சென்று, புத்த மத ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தவர்களின் மீது மோதியதில், எட்டு புத்த பிக்குகள் உயிரிழந்துள்ளனர் !  

மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

--------

MV Hondius என்ற பயணக் கப்பலுடன் தொடர்புடைய hantavirus பரவல், அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது !

கடந்த ஐந்து வாரங்களுக்கும் மேலாக, புதிய தொற்று சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவ்வமைப்பு கூறியது.

----------

Congo-வில், Ebola தொற்று பரவலால், இதுவரை 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள வேளை, அத்தொற்று தொடர்ந்து பரவி வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது !

RAAGA Aaha Siranta Isai!