
தீபாவளியை முன்னிட்டு, நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில், 3.28 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது !
குறிப்பாக, கிழக்குக்கரை, வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய நெடுஞ்சாலைகளில், இன்றே போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கும் என, மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.
PLUS நெடுஞ்சாலைகளில், 30 Smart Lane பாதைகள் திறந்துவிடப்படும்.
அப்போது, போக்குவரத்து சுமூகமாக இருப்பதை உறுதிச் செய்ய, அதிகாரிகளும் பணியில் இருப்பர்.
நாளை முதல் 10-ஆம் தேதி வரை, நெடுஞ்சாலைகளில் பாதை மூடலுக்கு வழிவகுக்கும் பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
ஆயினும், சாலைகளில் ஏற்படும் குழிகளைச் சீரமைப்பது போன்ற அவசரப் பணிகளுக்கு விலக்களிக்கப்படும் என்றும் அவ்வாரியம் குறிப்பிட்டது.
வாகனமோட்டிகள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதே வேளை, Astro வானொலி போக்குவரத்து பிரிவு மேற்கொண்ட ஆய்வில், 67 விழுக்காட்டினர், இம்முறை தீபாவளிக்குச் சொந்த ஊர் திரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், சிலர் நாளையும் நாளை மறுநாளும் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
----------
இதனிடையே, தீபத் திருநாளை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கி சனிக்கிழமை இரவு மணி 11.59 வரை, வாகனமோட்டிகள், 50 விழுக்காடு டோல் கட்டண கழிவை அனுபவிக்கலாம் !
ஆயினும், Sultan Iskandar மற்றும் Tanjung Kupang டோல் சாவடிகளுக்கு, அந்தக் கழிவு வழங்கப்ப்டாது.
அத்திருநாளைக் கொண்டாடும் அனைத்து இந்து மக்களுக்கும், பொதுப்பணித்துறை அமைச்சுவாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது.
--------
சிலாங்கூர் காஜாங்கில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், உடம்புப்பிடி நாற்காலியைப் பயன்படுத்திய போது, மின்சாரம் தாக்கி, பெண் ஒருவர் உயிரிழந்ததாக, சமூக ஊடகங்களில் பரவிய தகவல், பொய்யானது என காவல்துறை தெரிவித்துள்ளது !
அது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்பதை அத்துறை உறுதிப்படுத்தியது.
---------
சிலாங்கூரில் வெள்ளத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் !