Skip to main content
டிக்கெட் மோசடி செய்பவருக்கு ஒரு முடிவு !

 

 

டிக்கெட்டுகளை பதுக்கி அதிக விலைக்கு மறுவிற்பனை செய்யும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் ஆராயப்ப்பட்டு வருகின்றது !

உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவின அமைச்சு, தொடர்புத்துறை அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து, அந்த பணியில் இறங்கியுள்ளது.

சிலர் தானியங்கி முறையைப் பயன்படுத்தி அதிகளவில் டிக்கெட்டுகளை வாங்கி, பின்னர் அவற்றை அதிக விலைக்கு மறுவிற்பனை செய்வதைத் தடுக்க, இந்த முயற்சி கைகொடுக்கும் என KPDN தெரிவித்துள்ளது.

இம்மாதிரியான அநாவசியமான நடவடிக்கையால், பயனர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டிய நிலை ஏற்படுவதுதோடு மட்டுமல்லாமல், அதிகாரப்பூர்வமற்ற விற்பனையாளர்களிடம் வாங்கும்போது மோசடிக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது.

அதிகாரப்பூர்வமற்ற விற்பனையாளர்களிடம் வாங்கப்படும் டிக்கெட்டுகள் போலியானதாகவோ, ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதாகவோ அல்லது ஏற்பாட்டாளர்களால் ரத்து செய்யப்பட்டதாகவோ இருக்கலாம் என்றும் அமைச்சு கூறியது.

எனவே, பணம் செலுத்துவதற்கு முன், அதிகாரப்பூர்வ விற்பனைத் தளம், அசல் விலை, விற்பனையாளரின் அடையாளம் மற்றும் டிக்கெட்டின் பயன்பாட்டு விதிமுறைகளைச் சரிபார்த்துக்கொள்ளும்படி, பயனர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

-----------

சரவாக் Long Lellang-கில், வான்வழி மருத்துவ சேவை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஐவரின் DNA மாதிரிகள் பரிசோதனை, நாளைக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது !

DNA பரிசோதனை முடிந்த பின்னரே உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என், மாநில காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

அந்த ஐவரின் உடற்கூறாய்வும் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்கள் பலத்த தீக்காயங்களால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை, அந்த ஐந்து பேரை ஏற்றிச் சென்ற சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர், Long Lellang-கில் விபத்துக்குள்ளானது.

----------

குற்றச்செயல்கள் தொடர்ந்து மாறிவரும் நிலையில், நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி, கோலாலம்பூர் காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் !

குற்றவாளிகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருவதால், காவல்துறையினர் விரைவாகச் செயல்பட்டு, குற்றவாளிகளை விட ஒரு படி மேல் இருக்க வேண்டும் என, KL காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மலேசியா தொடர்ந்து மிகவும் பாதுகாப்பான நாடாக இருப்பதாகக் கூறிய அவர், 2024 உலக அமைதிக் குறியீட்டில் மலேசியா 12-வது இடத்திலும், 2024 உலக பயங்கரவாதக் குறியீட்டில் 57-வது இடத்திலும் இருந்ததாக சொன்னார்,

---------

பஹாங்  Cameron Highlands, Tanah Rata-வில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அங்குள்ள ஒரு பகுதி சாலை, தற்காலிகமாக மூடப்பட்டது !

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும், பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் சுத்தப்படுத்தும் பணிகளுக்கு வழிவிட ஏதுவாகவும், அந்த சாலை மூடப்பட்டது.

---------

மற்றொரு நிலவரத்தில், Tanah Rata-வில் உள்ள காட்டுப் பாதையில், நடைபயணம் மேற்கொண்டிருந்த போது பள்ளத்தில் தவறி விழுந்து, ஜெர்மனிய சுற்றுப்பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார் !

RAAGA Aaha Siranta Isai!