
பொது மக்களின் கள்ள உள்ளடக்கத்திற்கான, அதிகமான தேவை தான், திரைப்படத் துறைக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது !
தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் படங்களை உருவாக்க பத்து கோடி ரிங்கிட் வரை செலவழிக்கின்றன.
ஆனால், பலர் இலவசமாகவே அந்த உள்ளடக்கத்தை அனுபவிக்க விரும்புவதால், தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திக்கின்றன என, FINAS தெரிவித்துள்ளது.
அதாவது, புதிய ஹோட்டல் கட்டியபோது, மக்கள் இலவசமாக வந்து தங்கி, சாப்பிட்டு, எதுவும் செலுத்தாமல் வெளியேறினால், ஹோட்டல் உரிமையாளர்கள் கோபப்படுவார்கள்.
அதேபோல, திரைப்படத் துறையும் பாதிக்கப்படுகிறது என, அது உதாரணம் காட்டியது.
இந்தக் கடத்தல் ஒளிபரப்புப் தளங்கள், தங்கள் வீட்டை ஆபத்துக்குள்ளாக்கலாம்.
ஏனெனில், அவை, தங்களின் தனிப்பட்ட தரவுகளை திருடவும், குழந்தைகளை விரும்பத்தகாத உள்ளடக்கங்களுக்கு இட்டுச் செல்லவும் வாய்ப்பு உள்ளது என அது சொன்னது.
----------
மலேசியர்களில் போதுமானோர், infleunza தடுப்பூசி எடுத்துகொள்ளவில்லை என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் !
அத்தொற்று குறித்து அதிகமானோர் தெரிந்திருந்தும், தடுப்பூசி பெற்றோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என அவர்கள் கூறினர்.
எனவே, அத்தொறறால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ளவர்கள், குறிப்பாக நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்ட மூத்தவர்கள், அந்த தடுப்பூசியை விரைவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஏனெனில், நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், infleunza-வால் கடுமையான சிக்கல்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகமாக உள்ளது.
74 விழுக்காட்டினர், இந்த நோயைப் பற்றி அறிந்திருந்தும், 30 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளதை, கடந்தாண்டில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
---------
சிலாங்கூர் Bukit Kemuning-கில், 14 வயது பையனை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபருக்கு எதிராக, விரைவில் குற்றஞ்சாட்டப்படும் !
இம்மாத மத்தியில், அச்சந்தேக நபர், தனது வீட்டில் பொருட்களை எடுத்துச் செல்ல உதவினால், இணைய பேக்கேஜ் வாங்கித் தருவதாகக் கூறி, பின்னர் அப்பையனை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
-------
சிலாங்கூர் BatuCaves-சில், சிறார் சமூகநலத் துறை இல்லத்தில், இரண்டு சிறு பையன்களுக்கு எதிராக இயற்கைக்குப் புறம்பான செயலில் ஈடுபட்ட பராமரிப்பாளருக்கு, 5 பிரம்படிகளுடன் கூடிய 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது !