Skip to main content
திரங்கானு மோட்டார்சைக்கிள் நிகழ்ச்சி சோகத்தில் !

 

திரங்கானுவில் அண்மையில் நடைபெற்ற மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாக கூறப்படுவதை, காவல்துறை மறுத்துள்ளது !

சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அத்துறை கூறியது.

பல்வேறு சாலை விதிமீறல்களுக்காக, 1,850 அபராத அறிவிக்கைகள் வெளியிடப்பட்ட வேளை, 222 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அது சொன்னது.

அந்த நிகழ்ச்சி காலகட்டம் மட்டுமே, ஐவர் அடிபட்டு உயிரிழந்துள்ளனர்.

எனினும், அந்த விபத்துகள் சட்டவிரோத பந்தயத்தால் ஏற்பட்டதல்ல ; மாறாக வாகனமோட்டிகளின் கவனக்குறைவால் ஏற்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

--------

தெருநாய்கள் தொடர்பான விவகாரத்தை விவாதிக்கும் போது, அனைத்து தரப்பினரும் நியாயமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என, சிலாங்கூர் Menteri Besar கேட்டுக்கொண்டுள்ளார் !

அண்மையில், கிள்ளானில் நடைபெற்ற கைவிடப்பட்ட நாயைப் பிடிக்கும் நடவடிக்கையின்போது, Rocky என்ற நாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள், தெருநாய்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் போது, பொதுமக்களின் பாதுகாப்பும், விலங்குகளின் நலனும் சமமாக கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என Datuk Seri Amirudin Shari தெரிவித்தார்.

குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பை விட விலங்குகள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அவர் அவர் இவ்வாறு கூறினார்.

---------

சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் திவாலானவர் என அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க தகுதியுடையவரா என்பது குறித்து, இந்த வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என மாநில மந்திரி புசார் தெரிவித்துள்ளார் !

அந்த முடிவின் அடிப்படையில், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளதா என்பதும் தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.

--------

ஜொகூர் செனாய் மேம்பாலத்தில், high beam விளக்கு தொடர்பான தகராறைத் தொடர்ந்து ஒருவர் பாராங் கத்தியால் காரை வெட்டியதாகக் கூறப்படுகிறது !

இந்த சம்பவம் தொடர்பில், காவல்துறை இரு ஆடவர்களைக் கைது செய்துள்ளது.

--------

பஹாங் Janda Baik சாலையில், pickup வாகனமொன்றின் மீது, பெரிய மரம் விழுந்ததில்,  நால்வர் உயிரிழந்துள்ளனர் !

RAAGA Aaha Siranta Isai!