
நாட்டில் இவ்வாண்டு டெங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 56 புள்ளி 2 விழுக்காடு உயர்ந்துள்ளது!
இம்மாதம் 15ஆம் தேதி வரை மட்டும் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கி சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
அதே காலகட்டத்தில் டெங்கியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையோ 55.
ஆரம்ப காலகட்டங்களில் கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக சம்பவங்கள் பதிவாகின.
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அது கட்டுப்படுத்தப்பட்டாலும், பின்னர் இதர மாநிலங்களில் நிலைமை மோசமாகியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
------
பஹாங் குவாந்தானில் நேற்று வெப்பம் 36 புள்ளி ஒரு பாகை செல்சியசாக இருந்தது!
இது தீபகட்பத்தின் மிக உயரிய தினசரி தட்பவெப்பமாகும்.
எனினும் கிழக்கு மலேசியாவில் மிக அதிகமாக, சரசாக்கின் முலுவில் வெப்பம் 35 புள்ளி 2 பாகை செல்சியசாக உள்ளது.
__
ஆகக் கடைசி தகவல்படி சரவாக்கின் Serianநில் காற்றுத் தர குறியீடு மிகவும் ஆரோக்கியமற்ற அளவு, அதாவது 240ஆக உள்ளது.
அம்மாநிலத்தின் எட்டு இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றவில் உள்ளது.
__
Genting Sempahவின் மூன்றாவது சுரங்கப்பாதை , KL- Karak நெடுஞ்சாலையை விரிவுப்படுத்தும் பணிகள் எதிர்ப்பார்த்ததை விட முன்கூட்டியே நிறைவு பெறக்கூடும்!
2.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அத்திட்டம் 2030ஆம் ஆண்டு நிறைவுபெறும் என அட்டவணையிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 2029ஆம் ஆண்டே அது நிறைவு பெறும் என பொதுப்பணி அமைச்சு எதிர்ப்பார்க்கிறது.
__
இந்தியா, விசாகப்பட்டிணத்தில் வீட்டுப் பாடம் செய்யாததால் ஆசிரியரால் தண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஐந்து வயது மாணவன் உயிரிழந்துள்ளான்!
அச்சிறுவன் உயிரிழந்த தருணம் வகுப்பரையின் CCTV கேமராவில் பதிவான நிலையில், அது தற்போது சமூக வலைத்தளவாசிகளின் கோபத்தைத் தூண்டியுள்ளது.