
இவ்வாண்டு மே வரை இணைய குற்றங்கள் தொடர்பில் எண்ணாயிரத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவாகியிருக்கின்றன.
2025ஆம் ஆண்டு முழுவதுமே மொத்தம் ஆறாயிரத்துக்கும் அதிகமான குற்றச்சாட்டுகளே பதிவானதாக, துணை பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi மேலவையில் தெரிவித்தார்.
மே வரை மொத்த பத்தாயிரத்து இருநூருக்கும் மேற்பட்டோர் அதன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவற்றுள் தொலைத்தொடர்பு, மின்னணு வர்த்தகம், முதலீடு மற்றும் இல்லாத கடன் குற்றங்கள் தொடர்பான கைதுகளே அதிகம் என்றார் அவர்.
இந்நிலையை திறம்படக் கையாள்வதற்கு, ஒரு விரிவான இணைய குற்றச் சட்டத்தை இயற்ற வேண்டிய அவசரத் தேவை உள்ளது என, புதிய 2026 இணைய பாதுகாப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்தபோது அவர் கூறினார்.
---
இதனிடையே நாட்டின் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்தவும், மென்மேலும் சிக்கலாகி வரும் இணைய அச்சுறுத்தல்களை வேறருக்கவும், 2026 இணையப் பாதுகாப்பு சட்ட மசோதாவை மேலவை அங்கீகரித்துள்ளது!
1997 கணிணி குற்றச்சட்டத்தை ரத்து செய்யும் விதமாக முன்மொழியப்பட்ட அப்புதிய சட்ட மசோதாவில், 61 சட்டங்களை உள்ளடக்கிய மொத்தம் எட்டு பாகங்கள் உள்ளன.
-----
மலாக்கா, Durian Tunggalலில் கடந்தாண்டு மூவர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், மரண விசாரணையைத் தொடங்கும்படி தேசிய சட்டத்துறை தலைவர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது!
அரச மலேசிய காவல் படை சமர்ப்பித்திருந்த விசாரணை அறிக்கைகள் மீது நடத்தப்பட்ட விரிவான ஆய்வுக்குப் பிறகு அந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணையானது சம்பவத்திற்கான சரியான காரணம், சூழ்நிலைகளை தீர்மானிக்கும்; குறிப்பாக இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஏதேனும் குற்றக் கூறுகள் இருந்தனவா என்பதும் ஆராயப்படும்.
-----
கிளாந்தான் Tumpatடில் 15 வயது சிறுமியிடம் கொள்ளையடித்து அவளை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்ட 23 வயது ஆடவனுக்கு இருபது ஆண்டுகள் சிறை ஏழு பிரம்படிகள் விதித்து Sessions நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-----
UKவின் புதிய பிரதமராக பதவியேற்கிறார் Andy Burnham.
இதற்கு முன் அப்பதவியிலிருந்த Keir Starmerரின் இடத்தை நிரப்பி, பத்தாண்டுகளில் அந்நாட்டின் ஏழாவது பிரதமராக அவர் பதவியேற்பது குறிப்பிடத்தக்கது.