Skip to main content
தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் மூடப்படாது !

 

மடானி அரசாங்கத்தின் கீழ், எந்தவொரு தமிழ் மற்றும் சீனப் பள்ளியும் மூடப்படாது !

கல்வியமைச்சு அவ்வாறு கூறி உறுதியளித்துள்ளது.

அனைத்து வகை பள்ளிகளும், நாட்டின் கல்வி அமைப்பின் ஒரு பகுதியாக தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ்ப்பள்ளிகளுக்கான பராமரிப்பு நிதி 20 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து, 50 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்திய அரசாங்கத்தின் முயற்சியை, அமைச்சு மேற்கோள்காட்டியது.

--------

சிலாங்கூரில், 1 லட்சத்து 20-ஆயிரம் மாணவர்களுக்கு, இலவச காலை உணவு வழங்கப்படவுள்ளது !

வாழ்க்கைச் செலவினத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், குறிப்பாகப் பள்ளிக்குச் செல்லும் முன் காலை உணவு உண்ண நேரமில்லாதவர்களின் சுமையைக் குறைக்க உதவும் நோக்கில், அந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மாநில Menteri Besar தெரிவித்துள்ளார்.

---------

மேலும் சில செய்திகள் சுறுக்கமாக ;

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், மொத்தம் 38-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நாட்டில் வேலையை இழந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன !

--------

El Nino பருவ காலத்தின் போது ஏற்படும் பல இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள, Bomba முழு எச்சரிக்கையுடன் உள்ளதாக,  தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்துள்ளது !

--------

ஜொகூர் BATU PAHAT-டில், 13 வயது பேத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தாத்தாவின் தடுப்புக் காவல், மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது !

--------

பஹாங் காராக் நெடுஞ்சாலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மரணமடையும் விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும், treler லாரி ஓட்டுநர், 4 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்படுகிறார் !

---------

இவ்வாண்டு இதுவரை, 66-ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட இணைய மோசடி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன !

--------

முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி Tan Sri நளினி பத்மநாதன், மலேசிய ஊடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ! 

RAAGA Aaha Siranta Isai!