Skip to main content
தமிழ் ஊடகவியலாளர்கள் செம்மையுறும் பட்டறை !

 

தொடர்புத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகம், IPPTAR ஏற்பாடு செய்த தமிழ் ஊடகவியலாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சிப் பட்டறை, நேற்று பினாங்கில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது !

அப்பட்டறையில், 24 பங்கேற்பாளர்கள் கலந்து பயன் பெற்றனர்.

அந்த 3 நாள் பட்டறையில், செய்தியை வெளியிடுவதில் பின்பற்றக்கூடிய உகந்த நுணுக்கங்களும், ஊடக கோட்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டன.

இலக்கவியல் யுகத்தின் சவால்களை எதிர்கொள்ளவும், AI போன்ற நவீன தொழில்நுட்பங்களை ஊடகப் பணியில் ஆக்கக்பூர்வமாகப் பயன்படுத்தவும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு போதிய பயிற்சியும் அளிப்பதே, அப்பட்டறையின் நோக்கமாகும்.

---------

மதுபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிரான நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்படுகின்றன !

அச்சோதனை, வார இறுதி இரவு நேரங்களில் மட்டுெமே இல்லாமல், வார நாட்கள் இரவு நேரங்களிலும் நடைபெறும் என புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.

-------

நாட்டின் தீபகற்ப தென் மாநிலங்களில், குறிப்பாக மலாக்காவில் செயற்கை மழையைப் பொழிய வைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக, துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார் !

முன்னதாக அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட மேகவிதைப்பு நடவடிக்கை அதிகம் பலனளிக்கவில்லை என  Datuk Seri Dr Ahmad Zahid Hamidi கூறினார்.

--------

ஜொகூரில், வெளிநாட்டில் பதிவான வாகனத்துக்கு RON95 petrol-லை வாங்கிய சிங்கப்பூரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் !

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த அந்த தடையின் கீழ், கைது செய்யப்பட்ட முதல் நபர் இவராவார்.

RAAGA Aaha Siranta Isai!