
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் படி, நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகம், 28 இடங்களில் வெற்றிப் பெற்று, 77 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது !
இதே நிலை நீடித்தால், மொத்தம் 105 தொகுதிகளை அது வெற்றிக் கொள்ளும்; ஆனால் அவ்வெண்ணிக்கை, ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட போதாது.
இதனால், தமிழகம், தொங்கு சட்டமன்றத்தை நோக்கி நகருகிறது.
இருந்தபோதிலும், அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை வெற்றிக் கொண்டதன் அடிப்படையில், தனிப்பெரும் கட்சியாக TVK உருவெடுத்துள்ளது.
ஆட்சியை இழக்கும் நிலையில் உள்ள திமுக, வெறும் 12 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்று, 61 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மூன்றாவது இடத்தில் அதிமுக 9 இடங்களில் வென்று, 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
சீமானின் நாம் தமிழர் கட்சி ஓரிடத்திலும் முன்னிலைப் பெறவில்லை.
இன்றிரவுக்குள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளை, யாரும் எதிர்பாராத வகையில் விஜயின் TVK கட்சி பெரும் ஆதரவு அலையை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.