Skip to main content
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு!

 

தமிழக தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று பதவியேற்கவிருக்கின்றனர்! 

 

தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது, 

 

தவெக தலைவர் விஜய் நேற்று தமிழ்நாட்டின் 13ஆவது முதலமைச்சராகப் பதவியேற்றார். 

 

அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதிவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

 

தற்காலிக சபாநாயகரும் நேர்த்து தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவரது தலைமையில் இன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்கவிருக்கின்றனர். 

 

---- 

 

பேராவில் நேற்றிரவு பெய்த கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்! 

 

அவர்கள் அனைவரும் Batang Padang, Lurut, Matang மற்றும் Selamaவில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

 

கெடா, Kulimமில் 33 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

  

-----  

 

சிலாங்கூர், Seputeh நாடாளுமன்ற உறுப்பினர் Teresa Kokகின் முன்னாள் உதவியாளர் ஒருவர் மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது! 

 

பள்ளி விவேக பலகை கொள்முதல் திட்டத்தில், மோசடி மற்றும் ஊழல் செய்திருப்பதாக, தம்மீது சுமதப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். 

 

----- 

 

பினாங்கு முதலமைச்சர் பதவி காலத்தை இரு தவணைகளிலிருந்து பத்து ஆண்டுகளாக நீட்டிக்கும் திட்டம் இல்லை! 

 

பினாங்கு அரசியலமைச் சட்டத்தில் உள்ள தற்போதைய விதிகள், அப்பதவியை வகிப்பதற்கான வரம்பு குறித்து ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிடுகின்றன என, அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

----- 

 

எட்டு மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு இன்று விடுதலையாகிறார் தாய்லாந்தின் செல்வாக்குமிக்க முன்னாள் பிரதமர் Thakin Shinawatra. 

 

சிறை தண்டனையைத் தவிர்ப்பதற்காக, பொய் உரைத்து மருத்துவமனையில் தங்கியிருந்ததாதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

 

 
 

RAAGA Aaha Siranta Isai!