Skip to main content
தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராகப் பதவியேற்கிறார் விஜய்!

 

தமிழ்நாட்டின் 13ஆவது முதலமைச்சராக இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்! 

 

பதவியேற்புக்காக தனது வீட்டிலிருந்து பலத்த பாதுகாப்புடன் புறப்பட்ட விஜய் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்து சேர்ந்துள்ளார். 

 

அவருடன் இன்று 9 அமைச்சர்களும் பதவியேற்கவிருக்கின்றனர். 

 

பதவியேற்புச் சடங்கிற்காக அரங்கில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஆங்காங்கே பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. 

 

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராஹுல் காந்தியும் டெல்லியிலிருந்து சென்னை வந்திறங்கியிருக்கிறார். 

 

120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு தவெக ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. 

 

சட்டமன்ற தேரர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப்பெறும் கட்சியாக உருவெடுத்த தவெக, 118 பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சியமைக்க முடியாமல் போனது. 

 

திமுக-வின் கூட்டணியில் ஐந்து இடம் வென்ற காங்கரஸ் உட்பட மேலும் சில கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த நிலையில், விஜய்க்கு தற்போது 120 இடங்கள் உள்ளன. 

 

இதையடுத்து முதல்வராக பதவியேற்க அவருக்கு ஆளுநர் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்தார். 

 

நாளை சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்கும் நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர், விஜய்க்கு உத்தரவிட்டுள்ளார். 

 

தமிழக அரசியல் வரலாற்றில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு திராவிட கட்சிகள் இல்லாமல் புதிய கட்சி ஒன்று ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறை. 

 

அதுவும் கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, முதலமைச்சர் ஆகும் வரலாற்றுப் பெருமையை விஜய் பெருகிறார். 

RAAGA Aaha Siranta Isai!