
2026 தமிழ்மொழிப் பாடத் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஒன்பது லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் ஒதுக்கியிருக்கிறது மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவு மித்ரா!
மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துதல், தமிழ் மொழிப் பாடத்தில் சிறந்த அடைவு நிலையை எட்டுவதற்கு உதவுதல், தேர்வுகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான கல்விசார் ஆதரவை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
SPM மற்றும் STPM பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் தமிழ்மொழி திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் மனிதவள அமைச்சர் DS Ramanan Ramakrishnan.
இதன் மூலம் எண்ணாயிரத்து அறுநூற்று 90 மாணவர்கள் பயன்பெறுவர் என, அவ்வமைச்சு எதிர்ப்பார்க்கின்றது.
------
மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களுக்காக, நிதி நிறுவனங்கள் மற்றொருவருக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தும் சம்ப்மவங்கள் 149 விழுக்காடு உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் வரையில் மட்டும், அம்மாதிரியான ஒன்பதாயிரத்து அறுநூருக்கும் மேற்பட்ட கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக பிரதமர் துறை அலுவலகம் தெரிவித்தது.
------
போதை பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் ஐந்து மலேசியர்கள் ஜப்பானில் கைதானது தொடர்பில் விசாரிக்க, காவல் துறை விசாரணை குழு ஒன்றை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.
காலணியில் ஐந்து கிலோகிராம் எடையிலான cocain வகை போதை பொருளை மறைத்து வைத்ததற்காக, அவர்கள் விமான நிலையத்தில் கைதாகினர்.
-----
1MDB வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறை மற்றும் பதினொரு பில்லியன் ரிங்கிட் அபராதத்தின் அமுலாக்கத்தை ஒத்தி வைக்கக் கோரி, முன்னாள் பிரதமர் Datuk Sri Najib Tun Razak தாக்கல் செய்திருந்த மனுவை, KL உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
SRC International வழக்கு தொடர்பில் அவர் அனுபவித்து வரும் ஆறாண்டுகள் சிறை நிறைவு பெற்றதும், 2028ஆம் ஆண்டு அந்த 15 ஆண்டுகால சிறை தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
-----
ஆகக் கடைசி தகவல்படி நாட்டில் 27 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது.
மலாக்கா, சிலாங்கூர், KL நெகிரி செம்பிலான், பஹாங், ஜொகூர் திரங்காணு ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.