
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்!
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குகள் மே நான்காம் தேதி எண்ணப்படும்.
ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, எதிர்கட்சியான அதிமுக பிஜேபி கூட்டணி, நாம் தமிழர் கட்சி, நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் தவெக என, நான்கு பெரிய கட்சிகளுக்கிடையில் நான்கு முனை போட்டியாக இந்த தேர்தல் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 234 தொகுதிகளில், 118 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைக்கும்.
------
வீட்டிலிருந்தே கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் அணுகுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், அது துல்லியமாக ஆராயப்படும்!
ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என எல்லோரது நலனும் சீர்த்தூக்கி பார்க்கப்பட்டு, கல்வித் தரமும் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதிச் செய்யப்படும் என கல்வி அமைச்சு கூறியது.
அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி கொடுப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிப்பதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது.
அந்த அனுமதி நடைமுறைக்கு வந்தால், அதனால் கற்றல் கற்பித்தலில் எந்த பாதிப்பும் இல்லாத வண்ணம் அதனை அமுல்படுத்த கல்வி அமைச்சு திண்ணம் கொண்டுள்ளது.
------
நோன்பு பெருநாளை முன்னிட்டு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் விடுமுறைக்கு, நெகிழ்வான வேலை நேரத்தை பரிசீலிக்கும்படி நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன!
பெருநாளின் போது பொதுமக்கள் தங்களின் குடும்பத்தாரோடு நேரத்தை செலவிட அது உதவும் என மனிதவள அமைச்சு வலியுறுத்தியது.
நோன்பு பெருநாள் முதல் நாள் வெள்ளிக்கிழமை விழுந்தால், அடுத்த திங்கட்கிழமையும் விடுமுறை என பிரதமர் முன்னதாக அறிவித்திருந்தார்.
நோன்பு பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை விடுமுறை கொடுக்கப்படும்.
------
வடக்குத் தெற்கு விரைவுச் சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய விபத்து தொடர்பிலான விசாரணைக்காக, காவல் துறை Trailer லாரி ஓட்டுனர் ஒருவரைக் கைது செய்துள்ளது.
அந்த 28 வயது இளைஞன் போதை மருந்து உட்கொண்டிருந்தது சிறுநீரக பரிசோதனையில் உறுதியானதைத் தொடர்ந்து, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அச்சம்பவத்தில் மூவர் மோசமான காயங்களுக்கு ஆளாகினர்.