
நாட்டில் உள்ள எந்த தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது!
மாறாக அவை அனைத்திலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மேம்பாடு, பராமரிப்பு மற்றும் வலுவூட்டலில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என, கல்வி அமைச்சர் Datuk Sri Fadhlina Sidek உத்தரவாதம் அளித்துள்ளார்.
சமூகத்தில் இன்னமும் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படுமோ என்ற தவறான கண்ணோட்டும் உலவி வருவதால், இதனைத் தெளிவுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
-----
ஆகக் கடைசி தகவல்படி சரவாக்கின் Samarahanநில் மட்டும் காற்றின் தரம் மிக ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது!
மேலும், சரவாக், சபா, சிலாங்கூர், KL, Putrajaya, Negeri Sembilan, Johor, Melaka, Pahang, Perak ஆகிய மாநிலங்களில் உள்ள 40 இடங்களில் API குறியீடு ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது.
------
இதனிடையே தனது பொதுச் சேவை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் சுவாசக் கவசத்தை விநியோகிக்க சிலாங்கூர் அரசு தயாராக இருக்கிறது!
புகைமூடத்தால் எளிதில் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ள வர்கத்தினருக்கு உதவும் நோக்கில் அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
------
பெண்களுக்கான சிறப்பு சேவைகளை வழங்க E hailing நிறுவனங்களை ஊக்குவிக்கின்றது போக்குவரத்து அமைச்சு!
பெண் பயணிகளின் பாதுகாப்ப்பு மற்றும் செளகரியத்தை மேம்படுத்த அது வகைச் செய்யும் என அவ்வமைச்சு கூறியது.
-----
Anak Krakatau எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் பிரதான அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
சனிக்கிழமை முதலே அடுத்தடுத்த எரிமலை வெடித்ததால், மேலும் ஏழு விமான நிலையங்களும் மூடப்பட்டன.