Skip to main content
தமிழ்ப்பள்ளிகளுக்கு SmartTV !

 

30-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 140 தமிழ்ப்பள்ளிகளுக்கு, இவ்வாண்டு ஸ்மார்ட் டிவி வழங்கப்படும் !

கல்வி அமைச்சு அவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளில், ஒருங்கிணைந்த சிறப்புக் கல்வித் திட்டமான PPKI-யின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு, சீனம் மற்றும் தமிழ் மொழிப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல், அம்முயற்சி அமலுக்கு வரும் என அது சொன்னது.

சிறப்புக் கல்வி மாணவர்கள், பிற்காலத்தில் சாதாரண வகுப்பு மாணவர்களுடன் இணைந்து பயிலும்போது, அவர்களுக்குத் தாய்மொழி அறிவு அவசியமாகிறது என்பதை அமைச்சு சுட்டிக்காட்டியது.

---------

சபா Sandakan-னில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும், 300 ரிங்கிட் சிறப்பு உதவி தொகை, ஏற்கனவே அந்தந்த பள்ளிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது !

அந்த பள்ளிகள் உடனடியாக மாணவர்களுக்கு இந்த உதவித் தொகையை வழங்கும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் அழிந்த நிலையில், குறைந்தது 9,000 பேர் வீடில்லாமல் தவித்தனர்.

----------

இதனிடையே, Mercy Malaysia தற்போது சம்பவ இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது !

உணவு அல்லாத அத்தியாவசிய பொருட்கள், குறிப்பாக சுகாதார பொருட்கள் போன்றவற்றை,  அந்த அரசு சாரா அமைப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புவோர், Mercy Malaysia-வின் சமூக ஊடகப் பக்கங்களில் விவரங்களைப் பெறலாம்.

---------

காவல்துறையினர் சம்பந்தப்பட்ட எந்தவொரு முறைகேட்டையும், காவல்துறை மூடிமறைக்காது என தேசிய காவல்படை துணை தலைவர் தெரிவித்துள்ளார் !

கெடா கூலிமில் நடந்த ஆக்ரோஷமான கைது நடவடிக்கையை காட்டும் காட்சிகள் அடங்கிய காணொலி பரவலானதைத் தொடர்ந்து,  Tan Sri Ayob Khan Mydin Pitchay அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த காணொலியில், ஒரு காவல் வீரர், மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரை இழுத்து கீழே தள்ளி, அவரது தலையில் கால் வைத்து நிற்கும் காட்சி அடங்கியது ; விசாரணை நடைபெற்று வருகிறது.

----------

கெடாவில் 4 பகுதிகள், கிளாந்தானில் 5 இடங்கள், மற்றும் ஒட்டுமொத்த பெர்லிசுக்கு, முதற்கட்ட வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !

RAAGA Aaha Siranta Isai!