
வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தில் அனைத்து தரப்பினரும், சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் !
மதப் பிரச்சினைகளை யாரும் அரசியலாக்க வேண்டாம் என அவர் நினைவுறுத்தினார்.
கோவில்கள் கட்டுமானம் தொடர்பான விவகாரங்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், சீன ஆலயங்கள் போன்றவற்றின் கட்டுமான விதிமுறைகள் மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு இணங்க, கையாளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
-----------
இதனிடையே, அனுமதியில்லாத ஆலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள, மஇகா, மலேசிய இந்து சங்கத்துடன் இணைந்து, சிறப்புக் குழுவை அமைக்கும்.
சம்பந்தப்பட்ட நிலம், வழிபாட்டுத் தலத்திற்குச் சொந்தமானது அல்ல என கண்டறியப்பட்டால், அதன் நிர்வாகத்துக்கு, விவேகத்துடன் இடம் கொடுப்பது உட்பட, அக்குழு சிறந்த தீர்வைக் கண்டறிய உதவும் என, மஇகா தேசிய துணை தலைவர் M.சரவணன் தெரிவித்துள்ளார்
------------
பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாறு பாடத்திட்டம், எப்போதும் அரசியல் சார்பின்றி இருக்கும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது !
அப்பாடத்திட்டம் துல்லியமானது, சமநிலையானது மற்றும் காலத்திற்கேற்றது என்பதில் அவ்வமைச்சு உறுதியாக உள்ளது.
குறிப்பிட்ட பாடங்களுக்கு, அவ்வப்போது மற்றும் தேவைக்கேற்ப திருத்தங்கள் செய்யப்பட்டதாகவும், அமைச்சு கூறியது.
---------
2015-ஆம் ஆண்டு முதல், கடந்தாண்டு வரை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 327 சந்தேக பேர்வளிகளில், 172 பேர் மலேசியர்களாவர் !
சிலாங்கூரிலே, அதிகமான சம்பவங்கள் பதிவானதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, ஆபத்தான குற்றவாளிகளைக் கைது செய்ய முயற்சிக்கும் போது, அது போன்ற நடவடிக்கைகளைக் காவல்துறை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக, உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
----------
ஜொகூர் Skudai-யில், வீடொன்று தீயுண்டு, கர்ப்பிணி பெண் மற்றும் ஓர் ஆடவர் உயிரிழந்த சம்பவத்தில், குற்றவியல் அம்சம் ஏதும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது !