
Datuk Seri Hamzah Zainuddin, BERSATU-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் !
BERSATU-வின் ஒழுக்கக் குழுவால் அம்முடிவு எடுக்கப்பட்டதாகும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Seri Mohamed Azmin Ali தெரிவித்தார்.
அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த Hamzah Zainuddin, BERSATU அரசியலமைப்பை மீறியதால், பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
-----------
ஜொகூரில், பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக தம்மீது நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, E hailing ஓட்டுனர் மறுத்துள்ளார் !
அந்த மாதிரியான தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விவகாரம், இம்மாத தொடக்கத்தில் பகிரங்கமாக பரவியது.
அக்குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அந்த நபரின் PSV உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், அவர் எந்தவொரு e-hailing சேவையிலும் வேலை செய்ய முடியாதவாறு கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார் எனவும், முன்னதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார்.
----------
மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் Azam Baki, நிறுவனமொன்றுடன் பங்கு வைத்திருக்கும் விவகாரத்தை விசாரிக்க, சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது !
அக்குழுவை, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் தலைமையேற்கிறார்.
விசாரணை மூலம் கிடைக்கப்படும் முடிவுகள், பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கப் பேச்சாளர் Datuk Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
------------
கோலாலம்பூர், கெடா, பினாங்கு உட்பட, சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 8 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது !
----------
வங்காளதேச தேர்தலில், வங்காளதேச தேசியவாதக் கட்சி, மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது !
300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றி, இரண்டு-மூன்றாம் பங்கு பெரும்பான்மை அக்கட்சிக்குக் கிடைத்துள்ளது.
நீண்டகால அரசியல் குழப்பத்திற்குப் பிறகு வந்த இந்த வெற்றி, நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை மீண்டும் ஏற்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
2024-ஆம் ஆண்டில் இளைஞர் இயக்கம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை பதவியிலிருந்து அகற்றிய பின்னர், இது முதல் தேசிய தேர்தல் என்பதால், அதன் முடிவுகள் நாட்டின் எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கும் முக்கியத்துவம் பெற்றதாக மதிக்கப்படுகிறது.