
ஜொகூரில் காசநோய் சம்பவங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது !
அம்மாநிலத்தில் இதுவரை புதிய காசநோய் சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.
அந்நோய் பரவலைத் தடுக்க, அந்நோய் தொற்றியுள்ளவர்களுடன் இருப்பவர்களைக் கண்டறிதல் உள்ளிட்ட பல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 7 மாநிலங்களில் 10 புதிய காசநோய் Cluster-கள் கண்டறியப்பட்டதாகவும், ஜோகூரில் 30-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார்.
-------------
அனைத்துலக ஊடகமொன்றில் வெளியிடப்பட்ட ஒரு தகவலில், MACC தலைமை ஆணையருக்கு எதிராக, அவதூறான கருத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது !
இந்த விவகாரம் குறித்து காவல்துறை புகார் பெற்றுள்ளதாகவும், அதனை, வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, விசாரணை நடத்தும் என்றும் புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
-----------
Machang நாடாளுமன்ற உறுப்பினர் Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal உட்பட, 16 Bersatu தலைவர்கள், உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் !
முன்னதாக, Bersatu அரசியலமைப்பை மீறியதற்காக, Datuk Seri Hamzah Zainuddin, துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
----------
ரமலான் மாத முதல் நாளை, பெர்லிஸ் அரசாங்கம் சிறப்பு விடுமுறையாக அறிவித்துள்ளது !
---------
ஜொகூர் கோத்தா திங்கியில், தனது 7 மாத கர்ப்பிணி மனைவியை, கனவர் இடிக்கல்லால் அடித்துக் கொன்றதற்கு, பொறாமையே காரணம் என சந்தேகிக்கப்படுவதாக, விசாரணை மூலம் தெரிகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது !
-----------
மலாக்காவில் உள்ள பொது கழிவறையில், நேற்று பையில் போடப்பட்ட நிலையில் சடலமாக தொப்புல் கொடியுடன் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தாய் என நம்பப்படும், 18 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார் !