நாட்டில் நல்லிணக்கமும் ஒற்றுமையும், தொடர்ந்து பாதுக்காக்கப்பட வேண்டும் !
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து, பிரதமர் அதனை வலியுறுத்தினார்.
பல்லின மக்கள் வாழும் நாட்டில், மக்கள் ஒருவரையொருவர் மதித்து புரிந்துகொண்டு, உணர்வு தூண்டுதலால் பாதிக்கப்படாது, செயல்ப்பட வேண்டும் என பிரதமர் நினைவூட்டினார்.
பிரச்சனைகளைக் கையாள்வதில் மாற்று கருத்துகள் இருந்தாலும், அவற்றை சண்டையாகக் கொண்டுச் செல்லாது, நல்ல உரையாடல்கள் மூலம் தீர்ப்பது அவசியம் என அவர் மேலும் கூறினார்.
நாட்டில் வாழும் சீன மக்களுக்கு சீன புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, பிரதமர் அனைத்து மலேசியர்களும் செழிப்போடும் வளத்தோடும் நல்வாழ்வு பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
--
சீனப் புத்தாண்டை முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட சிறப்பபுச் சோதனையில்,போதைப்பொருள் உட்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று விரைவுப் பேருந்து ஓட்டுநர்கள் கைதாகியுள்ளனர்.
அவற்றில், இருவர் சிரம்பானிலும், ஒருவர் மலாக்காவிலும் என சாலை போக்குவரத்த துறை தெரிவித்தது.
எட்டு நாட்களாக நிகழ்த்தப்பட்ட அச்சோதனையில், நான்காயிரத்துக்கும் அதிகமான அனைத்து வகைப் பேருந்துகளும் உட்படுத்தப்பட்டன.
அதில், சாலை விதிமுறைகளை மீறிய 2 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் JPJ சொன்னது.
இதனிடையே அதே நடவடிக்கையில், ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு பல்வேறு சாலைக் குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
--
நேற்றிரவு பெய்த கனமழையால், சுபாங் Kampung Melayu பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் சுமார் 0.5 மீட்டர் அளவில் நீர்மட்ட உயர்வு ஏற்பட்டுள்ளதாக, தீயணைப்பு மீட்பு துறை தெரிவித்துள்ளது.
என்றாலும், இடம்பெயர்வுக்கான அவசியம் இன்னும் இல்லை என அத்துறை கூறியது.
அத்திடீர் வெள்ளத்தால், சில சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
--