
நாட்டில் பதிவாகியுள்ள காசநோய் சம்பவங்களில் 85 விழுக்காடு மலேசியர்களை உட்படுத்தியவை!
15 விழுக்காடு மட்டுமே வெளிநாட்டவர்களுக்குப் பீடித்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
எனவே TB சம்பவங்கள் அதிகம் வெளிநாட்டவர்களை மட்டுமே உட்படுத்தியிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என, அவ்வமைச்சு தெளிவுப்படுத்தியிருக்கிறது.
காசநோய் என்பது வெறும் மருத்துவப் பிரச்சினை மட்டுமல்ல;
அது நெரிசலான வாழ்க்கை நிலை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சமூக-பொருளாதார காரணங்களுடனும் நெருக்கமாக தொடர்புடைய ஒரு நோயாகும் என KKM மேலும் கூறியது.
--
ஆறு வயதில் ஒன்றாம் ஆண்டில் சேறும் முடிவு குறித்து பெற்றோர்களிடமும், பாலர் பள்ளிகளிடமும் எழும் பல்வேறு கருத்துக்களைக் கல்வி அமைச்சு நன்கறிந்துள்ளது!
அவை குறித்து ஆழமாகக் கலந்து பெற்றோர்களுடனும், தனியார் பாலர் பள்ளிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என, அமைச்சர் Fadhlina Sidek கூறியுள்ளார்.
கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன என்றார் அவர்.
ஆறு வயது பிள்ளைகளை முதலாம் ஆண்டில் சேர்க்கும் பரிந்துரைக்கு, பெற்றோரிடமிருந்து அரசாங்கத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது.
--
நேற்று தொடங்கி எல்லா வழிக்குமான ETS ரயில் சேவைகளுக்கு, 30 விழுக்காட்டுக் கழிவை அறிவித்துள்ளது KTMB நிறுவனம்!
இந்த சலுகை கையிருப்புத் தீரும் வரை மட்டுமே.
--
ஜொகூர், செகாமாட்டில் நபர் ஒருவரின் சீனப்புத்தாண்டு கொண்டாட்டம் விபரீதத்தில் முடிந்தது!
முப்பது வயதான அவர் தனது வீட்டின் முன் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட அசம்பாவிதத்தில் அவர் தனது இடது காலை இழக்க வேண்டியதாயிற்று.
--
இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
--
இன்று ரமலான் நோன்பைத் தொடக்கும் நாட்டின் அனைத்து முஸ்லீம்களுக்கும் மாமன்னர் தம்பதியர் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.