
ஜொகூர் Segamat-டில், பட்டாசு வெடிப்பில் ஒரு காலை இழந்ததாகக் கூறப்படும் நபர், மருத்துவமனையில் நல்ல நிலையில் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது !
அவர் குணமடைந்தவுடன், அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படுமென அத்துறை கூறியது.
அந்நபர், சீனப் பெருநாள் கொண்டாட்டத்தில், தனது வீட்டின் முன் பட்டாசு வெடித்துக் மொண்டு குதூகலத்தில் திளைத்திருந்த போது, அச்சம்பவம் நிகழ்ந்தது.
--------
கோலாலம்பூரில் நபர் ஒருவர், தனது இளம் வளர்ப்பு மகளை உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் துன்புறுத்துவது போன்ற, பரவலான அண்மைய காணொலி குறித்து, காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர் !
இச்சம்பவம் டிசம்பர் மாதம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், அச்சந்தேக நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
----------
கோலாலம்பூர், ஜொகூர் உட்பட சில மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !
அம்மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்றிரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-----------
முன்னாள் தலைமை நீதிபதி Tun Abdul Hamid Mohamad, இன்று தனது 84-ஆவது வயதில் காலமானார் !
மரணத்துக்கான காரணத்தை, அவரது குடும்பத்தார் தெரிவிக்கவில்லை.
-----------
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மலாயன் புலிகள் உட்பட, சுமார் ஆயிரம் வனவிலங்கு பாகங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக, இரண்டு சகோதரர்கள் உட்பட மூன்று வியட்நாமியர்களுக்கு, 128.9 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது !