Skip to main content

Advertisement

நான்கு திட்டங்களை அறிவித்துள்ளது கல்வி அமைச்சு !

நான்கு திட்டங்களை அறிவித்துள்ளது கல்வி அமைச்சு !

ஆறு மற்றும் ஏழு வயது மாணவர்களை, ஒரே சமயத்தில் ஒன்றாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளும் நிலையை சமாளிக்க நான்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் ஆசிரியர்களையும் புதிய வகுப்பறைகளையும் ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட மேலும் சில அணுகுமுறைகள் வரையறுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதிக மாணவர்களைக் கொண்ட பள்ளிகளிலிருந்து சில மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதும், காலை மாலை என இரு நேர வகுப்புகள் நடத்தப்படுவதும் அதிலடங்கும் என அமைச்சு சொன்னது. 

ஆறு வயதிலேயே பிள்ளைகளை ஒன்றாம் ஆண்டில் சேர்க்கும் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு, பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

-- 

சபாவில், நான்கு நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போன ஒருவரின் உடல் இன்று சுமார் 71 கி.மீ தொலைவில் Papar கடற்கரை அருகே கரையொதுங்கியது. 

--

நாட்டில் சபா மாநிலத்தின் சில பகுதிகளுக்கு தொடர்ச்சியான கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது, மலேசிய வானிலை ஆய்வுத் துறை. 

-- 

Epstein  விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட , தனது இளைய சகோதரர் Andrew விசாரணை குறித்து UK காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுக்க தயார் எனக் கூறியுள்ளார் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ்!  

பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய வங்கியாளர் Jeffrey Epstein-நுக்கு, அரசாங்கத்தின் அந்தரங்க ஆவணங்களை அனுப்பிய சந்தேகத்தின் கீழ் Andrew முன்னதாகக் கைது செய்யப்பட்டார். 

--  

சிங்கப்பூர் செல்லும் பயணக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அக்கப்பலில் இருந்த மற்ற பணியாளர்களும் 224 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். 

-- 

RAAGA Aaha Siranta Isai!