Skip to main content

Advertisement

யூகங்களை நிறுத்துங்கள் !

யூகங்களை நிறுத்துங்கள் !

மலேசிய ஆயுதப் படையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் ! 

தனது மகனின் மரணம் குறித்த யூகங்களை வெளியிடுவதை நிறுத்துமாறு மறைந்த ராணுவ உறுப்பினர் கே. இந்திரனின் தாயார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். 

பிரேத பரிசோதனையில் இறந்தவரின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை; எனவே, அவர் பகடிவதைக்கு ஆளாகியோ அல்லது துன்புறுத்தியோ மரணிக்கவில்லை என பாதிக்கப்பட்டவரின் தாயார் கூறினார்.  

இந்திரனின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய மேலும் சில சோதனைகளும் உள் விசாரணைகளும் நிகழ்த்தி வருவதாக அவர் மேலும் கூறினார். 

கடந்த 18 ஆம் திகதி கவசக் குழுப் பயிற்சியில் கலந்து கொண்டு திரும்பிய 22 வயதான இந்திரன், மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார், பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி ஒரு நாள் கழித்து உயிரிழந்தார். 

-- 

நாட்டில் தற்போது சபா மாநிலம் மட்டுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 

சமூக நலத் துறையின் ஆகக் கடைசி தகவல் படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தற்போது 18 துயர்துடைப்பு மையங்களில் 3000 க்கும் அதிகமானோர் அடைக்கலம் நாடியுள்ளனர். 

-- 

நெகெரி செம்பிலான், Johol-லில் டின் திறப்பானைக் கொண்டு 80 வயது தாயைத் தாக்கிய 50 வயது மகள் கைதாகியுள்ளார். 

பாதிக்கப்பட்டவர் கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ள நிலையில்,சந்தேக நபருக்கு மனநலப் பிரச்சினைகள் இருக்கலாம் என காவல் துறை சந்தேகிக்கிறது. 

--

ஜொகூர் Simpang Renggam, Kluang, Benut, Pontian ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை முந்தைய நீர் விநியோக இடையூறுகள் மற்றும் நீடித்த வறட்சியால் ஏற்பட்டது. 

அது எந்த தரவு மையங்களும் உருவாக்கப்படாததால் அல்ல என மாநில மந்திரி பெசார் தெரிவித்துள்ளார். 

--

ஆதாரமற்ற கூற்றை வெளியிட்டதற்காக Bloomberg செய்தி நிறுவனத்திற்கு எதிராக,மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki, அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.  

முன்னதாக, Bloomberg வெளியிட்ட செய்தியில், Azam Baki நிதி சேவை நிறுவனம் ஒன்றில் பங்குகளை வைத்திருந்ததாக கூறியது. 

-- 

RAAGA Aaha Siranta Isai!