Skip to main content
மறைந்த கே.இந்திரனின் தங்கைக்குக் கல்வி உதவி !

மறைந்த கே.இந்திரனின் தங்கைக்குக் கல்வி உதவி !

பயிற்சி முகாமில் இருந்த போது உயிரிழந்த ராணுவ படை மாணவர் K இந்திரனின் இளைய சகோதரிக்கு, எந்த வித கல்வி உதவி தேவைப்பட்டாலும் அதனை வழங்க தயார்! 

கல்வி அமைச்சர் Fadhlina Sidek அந்த உத்தரவாதத்தை வழங்கியிருக்கிறார். 

தேசிய வகை பள்ளியில் ஆறாம் ஆண்டு பயிலும் அம்மாணவின் கல்வித் தேவைகள் அவ்வப்போது நிரப்பப்படும் என அவர் கூறினார். 

22 வயதாகும் K இந்திரன் ராணுவப் பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

------ 

ரமலான் மாத சிறப்பு உதவித் தொகை மற்றும் e-wallet உதவித் தொகை வழங்கப்படவிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி போலியானது! 

அப்படி ஒரு அறிவிப்பை அரசாங்கம் வெளியிடவில்லை என, நிதியமைச்சு கூறியிருக்கிறது. 

சமூக ஊடகங்களில் தமது புகைப்படத்தை பதிவிட்டு யாரோ அந்த அடிப்படைற்ற தகவலை பகிர்ந்துள்ளனர் என்றும், நம்பி ஏமாற வேண்டாம் என்றும், நிதியமைச்சருமான பிரதமர் DSAI பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். 

------  

சிலாங்கூர், ரவாங்கில் சாலை சோதனை நடவடிக்கையின் போது சாலை போக்குவரத்து அதிகாரிகள் பட்டாசுகளால் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது! 

அவர்கள் பணியில் இருந்த போது தூரத்திலிருந்து 20லிருந்து 30 பேர் கொண்ட குழு அவர்களை நோக்கி பட்டாசுகளை கொலுத்தியதாகக் கூறப்படுகிறது. 

பாதுகாப்புக் கருதி அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை முடித்துக் கொண்டனர்;  

எனினும் இவ்விவகாரம் தீவிரமாகப் பார்க்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக, புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் மாநில JPJ இயக்குனர் தெரிவித்தார். 

-----  

இவ்வாண்டு ஜனவரி மட்டும் முப்பத்தைந்து லட்சம் ரிங்கிட் நட்டத்தை உட்படுத்திய நூரு காதல் மோசடிச் சம்பவங்கள் காவல் துறையிடம் பதிவாகியிருக்கிறது! 

இது கடந்தாண்டு ஜனவரியில் பதிவான சம்பவங்களை விட அதிகம் என்றாலும், கடந்தாண்டு நட்ட மதிப்பு இதைவிட அதிகம் என புக்கிட் ஆமான் தெரிவித்தது. 

------  

பஹாங், Bentong, Bera மற்றும் ஜொகூர் செகாமாட்டில் கனமழை எச்சாரிக்கை.  

அப்பகுதிகளில் இன்று காலை ஒன்பது மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என MetMalaysia கணித்துள்ளது. 

 

RAAGA Aaha Siranta Isai!