Skip to main content

Advertisement

உடை காரணமாக புகாரை ஏற்காதது, கடும் குற்றம் !

உடை காரணமாக புகாரை ஏற்காதது, கடும் குற்றம் !

 

பொதுமக்கள் அளிக்கும் புகாரை, அவர்களின் உடை காரணமாக காவல்துறை ஏற்க மறுப்பது, கடுமையான குற்றமாகக் கருதப்படும் ! 

இது, பணியிலிருந்து நீக்கப்படும் அளவுக்கு தண்டனைக்குரியதாகும் என, நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், புதிய சட்டம் கொண்டு வர உடனடி திட்டம் எதுவும் இல்லை, ஏனெனில் தற்போதுள்ள அரசாங்க உத்தரவுகள் போதுமானவை என உள்துறை அமைச்சு தெரிவித்தது. 

கடந்தாண்டு இறுதியில், மலாக்காவில் சாலை விபத்து குறித்து புகாரளிக்க வந்த பெண், காவல் நிலையத்தினுள்ளே செல்ல அனுமதியளிக்கப்படாமல் போன சம்பவம், முன்னதாக பரவலாகியிருந்தது. 

--------- 

சபா Kota Kinabalu கடற்கரையில், இன்று அதிகாலை ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், கடந்த 11 ஆண்டுகளில் நாட்டைத் உலுக்கிய மிக வலிமையானதாகும் !  

இது 2015-ஆம் ஆண்டு Ranau-வில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், 18 பேர் கொல்லப்பட்டனர்.  

இவ்வேளையில், இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது காயங்கள் குறித்து, இதுவரை எந்த தகவலும் இல்லை.  

இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிலைமையை, அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பர் என தேசிய பேரிடர் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

--------- 

பிரதமரின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், சட்டத்துறை மற்றும் அரச தரப்பு வழக்கறிஞரின் அதிகாரங்களைப் பிரிப்பதற்கும் வகை செய்யும் மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளன ! 

-------- 

மலேசியா வயதான நாடாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், பராமரிப்பு துறையை ஒழுங்குபடுத்த, தனி அமைப்பை அமைப்பது குறித்து, அரசாங்கம் பரிசீலித்து வருகிறது ! 

RAAGA Aaha Siranta Isai!