Skip to main content
வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை !

வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை !

  

நாட்டில் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த மனிதவள அமைச்சு ஐம்பது லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது! 

அதன் கீழ் வரும் ஏப்ரல் முதல் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் Perkeso வழியாக நாடு முழுவதும் உள்ள 400 உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு திட்டங்கள்செயல்படுத்தப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.  

MYCEC எனும் நாட்டின் முதல் தேசிய இலக்கவியல் வேலை வாய்ப்பு ஆய்வு மையத்தைத் திறந்து வைத்த அமைச்சர், இது அதிகமான மலேசியர்களை சென்று சேற வேண்டும் என வலியுறுத்தினார். 

மேலும் இந்த MyCEC மையம் தங்களின் தகுதியுடன் ஒத்துப் போகாத வேலை செய்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார்....  

நாட்டில் வேலையின்மை விகிதம் வரலாற்றில் முதல்முறையாக மூன்று விழுக்காட்டுக்கும் கீழ் இருப்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

-- 

வெளிநாட்டவர்களை வர்த்தக வாகன ஓட்டுநர்களாக நியமிக்கும் நிறுவனங்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ! 

அதன் தொடர்பில், தேசிய நிதியியல் குற்ற தடுப்பு மையம்,குடிநுழைவுத் துறைஆகியவற்றுடன் இணைந்து செயல்படப்போவதாக, சாலைப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

அத்தகைய சட்ட விரோத குற்றத்தில் ஈடுபடும், ஓட்டுநர், நிறுவன உரிமையாளர்கள், நிர்வாகம் என சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அது எச்சரித்தது. 

-- 

கடந்தாண்டில் மட்டுமே இணையக் குற்றங்கள் அறுபத்து ஆறாயிரமாக அதிகரித்துள்ளன!  

அது முந்தைய ஆண்டில் பதிவான 35 ஆயிரம் குற்றங்களுடன் ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. 

அது,சுமார் 3 பில்லியன் ரிங்கிட் இழப்புகளை உள்ளடக்கியது. 

-- 

நாட்டில் கடந்தாண்டு தொடங்கி டெங்கி காய்ச்சல் 54.7% குறைந்து, அதன் தொடர்பான உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்துள்ளன. 

-- 

நாட்டில் உடல் உறுப்பு தானங்கள் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணமாக, குழப்பமும் தவறான புரிதலும் உயிரிழந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற குடும்பத்தினரின் கவலைகளும் இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது. 

RAAGA Aaha Siranta Isai!