Skip to main content

Advertisement

வரி மின் தாக்கல் முன்கூட்டியே செய்யுங்கள் !

வரி மின் தாக்கல் முன்கூட்டியே செய்யுங்கள் !

 

மலேசியர்கள், வரி தாக்கல் காலம் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும் நிலையில், தங்களின் மின் தாக்கல் படிவத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என நினைவூட்டப்பட்டுள்ளனர் ! 

தேவையான ஆதார ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்வது, பின்னர் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க உதவும் என, உள்நாட்டு வருவாய் வாரியம் தெரிவித்துள்ளது. 

இவ்வாண்டில் விரிவாக்கப்பட்ட வரி விலக்கு  வசதிகளைப் பயன்படுத்தலாம் எனவும், LHDN நினைவூட்டியது. 

இதில், மலேசியாவில் வசிக்கும் பெற்றோர் மற்றும் பாட்டி-தாத்தாவிற்கான மருத்துவச் செலவுகளுக்காக, அதிகபட்சம் எட்டாயிரம் ரிங்கிட் வரை விலக்களிக்கப்படுகிறது.

அது, மருத்துவம் மற்றும் பல் சிகிச்சை, முழுமையான மருத்துவ பரிசோதனை, மற்றும் பராமரிப்பாளர் செலவுகளை உட்படுத்தியதாகும். 

---------- 

காசநோய் குறித்து பலர் தவறாக புரிந்து வைத்திருப்பதாக, பொது சுகாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார் ! 

அதில், அந்த நோய் குணமாகாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என, அவர் வலியுறுத்தினார். 

சரியான சிகிச்சை பெற்றால், காசநோய் முழுமையாக குணமாகும் என அவர் குறிப்பிட்டார். 

நீண்டகால காய்ச்சல் அல்லது இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல் போன்ற, ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என அவர் மக்களை கேட்டுக்கொண்டார். 

---------- 

சபாவில் நேற்று ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தால், பொது சொத்துக்கள் ஏதும் சேதமடைந்ததாக, புகாரேதும் கிடைக்கப் பெறவில்லையென, பொதுப் பணித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது ! 

---------- 

இதனிடையே சபாவில் 4-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர் ! 

--------- 

2022 முதல் கடந்தாண்டு வரை, 12 மாதங்கள் மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய, மொத்தம் 175 கைவிடப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு, சமூக நலத் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது ! 

RAAGA Aaha Siranta Isai!