Skip to main content
தொழில் தொடங்க விரும்பும் இந்தியர்களுக்கு நற்செய்தி !

 

 

தொழில் தொடங்க விரும்பும் மலேசிய இந்திய இளைஞர்களுக்கு, நிதியுதவி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன !

அதற்காக, மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு உள்ளிட்ட அரசாங்க அமைப்புகள் மூலம், பல்வேறு திட்டங்களை MADANI அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

ஏற்கெனவே தொழில் செய்து வருபவர்கள், தங்களது வணிகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கும் உதவிகள் வழங்கப்படும் என, மனிதவள அமைச்சர் Datuk Seri R. ரமணன் தெரிவித்துள்ளார்.

இதன் வழி, இந்திய சமூகத்தினரிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே தொழில்முனைவோர் வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும், என்றாரவர்.
--------

மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கான, மனித உரிமைகள் நடுவர் மன்றம் அமைக்கும் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது !

அதற்கான சட்ட திட்டமும் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என, சட்ட சீர்திருத்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த நடுவர் மன்றம் மூலம், அதிக சட்டச் செலவுகள் இன்றி SUHAKAM-மின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் எனவும், அவ்வமைச்சு கூறியது.

---------

சிலாங்கூரில் 1,800-ருக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் !

பேராக்கில் கிட்டத்தட்ட 500 பேரும், நெகிரி செம்பிலானில் 16 பேரும், PPS மையங்களில் தங்கியுள்ளனர் !

---------

கெடா SIK-கில், வீடொன்று தீப்பற்றியதில், ஒன்றரை வயது குழந்தையும், 3 வயதான சிறுவரும், தீயில் கருகி மாண்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது !

---------

தென் அமெரிக்கா பெருவில், இன்று அதிகாலையில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள போதும், மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தால் ஏதும் இல்லை என Met Malaysia தெரிவித்துள்ளது !

RAAGA Aaha Siranta Isai!