Skip to main content
தோமஸ், ஊபர் கிண்ண போட்டிகள் தொடக்கம் !

 

மலேசிய பூப்பந்து அணிக்கு மக்கள் அளிக்கும் முழு ஆதரவு மிகவும் அவசியம் !

இந்த ஆதரவு, தோமஸ் மற்றும் ஊபர் கிண்ண பூப்பந்து போட்டியில், தேசிய வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்து, அவர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவும் என, Astro Arena-வின் முன்னாள் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் ரசிகர்கள் அளிக்கும் நேர்மையான ஆதரவு, பூப்பந்து வீரர்களை உற்சாகப்படுத்தி, மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

மலேசியா, இன்று குழு நிலை ஆட்டத்தின் முதல் சுற்றில் தனது சவாலைத் தொடங்குகிறது.

ஊபர் கிண்ண பூப்பந்து போட்டியில், மலேசியாவும், துர்க்கியேவும் மோதும் ஆட்டத்தை, இன்று பிற்பகல் மணி 2.30-க்கு, Astro அலைவரிசை 815-தில், நேரலையாகக் காணலாம்.

தோமஸ் கிண்ணத்தில், மலேசியா - இங்கிலாந்து மோதும் ஆட்டத்தை, மாலை 6 மணிக்கு, Astro அலைவரிசை 816-றில் பார்க்கலாம்.

---------

Newcastle-லுக்கு எதிரான இன்றைய பிரிமியர் லீக் ஆட்டத்தில் விளையாட, Arsenal-லின் Bukayo Saka உடற்தகுதி கொண்டிருப்பதாக, நிர்வாகி Mikel Arteta நம்பிக்கை தெரிவித்துள்ளார் !

EFL கிண்ண இறுதியாட்டத்துக்குப் பிறகு, அவர் காயம் காரணமாக எந்த ஆட்டங்களிலும் விளையாடவில்லை.

Jurrien Timber-ரும் காயப் பிரச்சனையில் இருப்பதால், இன்றைய ஆட்டத்தைத் தவறவிடுகிறார்.

Arsenal - Newcastle மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, நள்ளிரவு மணி 12.30-க்கு, Astro அலைவரிசை 811 மற்றும் Sooka-வில் கண்டு களிக்கலாம்.  

---------

மேலும் சில EPL ஆட்டங்களும் உள்ளன !

Liverpool - Crystal Palace மோதும் ஆட்டத்தை, இன்று இரவு 10 மணிக்கு, Astro அலைவரிசை 812 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.  

Fulham - Aston Villa மோதும் ஆட்டத்தை, இரவு மணி 7.30-க்கு, அலைவரிசை 811-றில் பார்க்கலாம்.  

--------- 
 
Southampton-னுக்கு எதிரான இன்றைய FA கிண்ண அரையிறுதியாட்டத்தில், Manchester City, காயம் காரணமாக Rodri-யை களமிறக்காது !

Manchester City - Southampton மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, நள்ளிரவு மணி 12.15-க்கு, Astro அலைவரிசை 814 மற்றும் Sooka-வில் கண்டு களிக்கலாம்.  

RAAGA Aaha Siranta Isai!