
குறைந்தபட்ச ஊதிய ஆணை தொடர்பான மதிப்பாய்வு, செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் !
அதன் முடிவுகள், தற்போதைய குறைந்தபட்ச ஊதியத்தை திருத்த வேண்டுமா அல்லது அதையே தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் முக்கிய அடிப்படையாக இருக்கும் என, மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய குறைந்தபட்ச ஊதிய ஆணை, மாதாந்திர 1,700 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அது கடந்தாண்டு ஆகஸ்டில் அமலுக்கு வந்தது.
--------
சிலாங்கூர் அரசாங்கம், மேற்காசிய மோதலின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில், மாநில அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அமல்படுத்துகிறது !
இம்மாதம் 15-ஆம் தேதி முதல், ஒவ்வொரு வாரமும் செவ்வாய் முதல் வியாழக்கிழமை வரை, இம்முறை நடைமுறைக்கு வரும் என மாநில Menteri Besar தெரிவித்துள்ளார்.
தனியார் துறைகளும், தங்கள் தொழில் தேவைக்கு ஏற்ப, இதனை நடைமுறைப்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன.
---------
அரசாங்க ஊழியர்கள், அலுவலக உடைக்கு மாற்றாக, தினமும் Batik உடையை அணிய ஊக்குவிக்கப்படுகின்றனர் !
அரசாங்க அலுவலகங்களில் குளிரூட்டியின் வெப்ப அளவு குறைந்தபட்சம் 24 பாகை செல்சியஸாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற அண்மைய அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுச் சேவை துறை தலைமை இயக்குநர் அவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.
-------
இவ்வேளையில், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், ஈரானின் Hormuz நீரிணை வழியாக மலேசியாவுக்குச் சொந்தமான முதல் எண்ணெய் கப்பல், பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளது !
இது குறித்து மலேசியாவிலுள்ள ஈரான் தூதரகம் x தளத்தில் பதிவிட்டுள்ளது.
--------
ஜொகூர் செகாமாட்டில், ஐவர் கொண்ட குடும்பம் பயணித்த வேனின் பின்னால் மோதி, மூவரைக் கொன்ற போதைப்பொருள் உட்கொண்டிருந்த Trailer ஓட்டுநர், இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகிறார் !