
Tun Dr Hasah Mohd Ali அவர்களின் மறைவுக்கு உலகத் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்த வண்ணமாக உள்ளனர்!
மலேசியர்களால் மிகவும் விரும்பப்படும் Tun Hasmahவிடம், பல்வேறு நல்ல குணாதிசியங்கள் இருக்கின்றன என Astro Awaniயிடம் தெரிவித்துள்ளார், Mercy Malaysia தோற்றுனரும் முன்னாள் சுகாதார ஆலோசகருமான Tan Sri Dr Jemilah Mahmood.
அவருடனான முழு நேர்காணலை astroawani.comமில் பார்க்கலாம்.
இதனிடையே சிங்கப்பூர் பிரதமர் Lawrance Wong, ஜப்பானிய அரசாங்கம், குவாலாலும்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆகிய தரப்புகளும் Tun Hasmahவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Muhd அவர்களின் துணைவியாரான Tun Dr Hasmah, நேற்று காலை தனது 100ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
------
மாதாந்திர அடிப்படை சம்பளத்தை ஈராயிரம் ரிங்கிட்டாக உயர்த்துவது குறித்து, 2027 வரவு செலவு திட்டம் தான் முடிவுச் செய்யும்!
எனவே பிரதமர் DSAI-இன் பட்ஜட் தாக்கலுக்காக காத்திருக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார் பொருளாதார அமைச்சர் Akmal Nasrullah Mohd Nasir.
இவ்விவகாரத்தில், முதலாளிமார்கள், சிறு குறு நடுத்தர வியாபாரிகள் ஆகியோரின் நிலை குறித்தும் ஆராயப்பட்டு, ஆழமான ஆய்வுக்குப் பிறகே முடிவெடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
------
இதனிடையே 2027 பட்ஜட்டின் கீழ் தங்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய ஒதுக்கீடு கிடைக்கும் என, மலேசிய நேரடி விற்பனை தொழிற்துறை மேம்பாட்டு சங்கம் நம்புகிறது!
அரசாங்கத்தின் வலுவான ஆதரவின் மூலம் அத்துறையை மேம்படுத்தி அதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தையும் பலப்படுத்த முடியும் என, அதன் தலைவர் , Datuk Seri Dr Barani Karunakaran பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளார்.
------
இதனிடையே இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் போதை பொருள் கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து மலேசியர்கள் கைதாகியிருக்கின்றனர்!
தங்களின் காலணியில் அதனை மறைத்து வைத்து கடத்த முயன்ற அவர்கள் ஜகார்த்தா அனைத்துலக விமான நிலையத்தில் பிடிப்பட்டனர்.
------
ஆகக் கடைசி தகவல்படி, ஜொகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, Putrajaya, சிலாங்கூர், பஹாங் மற்றும் சரவாக்கில் 27 இடங்களில், காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது.