பட்டதாரிகள் மற்றும் பகுதி திறன் கொண்ட தொழிலாளர்களுக்கானத் தொடக்கக்கட்ட அடிப்படைச் சம்பளத்தைச் செயல்படுத்தும் சிறப்பு வழிகாட்டுதல் தயாராகி வருகிறது !
அதில், டிப்ளோமா, Degree மற்றும் தொழில்திறன் சான்றிதழ் பெற்றவர்களின் வேலை மற்றும் தகுதிகளுக்கு ஏற்ப சம்பள வழிகாட்டுதல் உருவாக்கப்படும் என மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வழிக்காட்டுதலைப் பின்பற்றியே அடுத்தாண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ள அப்புதிய குறைந்தபட்ச ஊதிய உத்தரவு செயல்படுத்தப்படும் என அது கூறியது.
2027-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், பொதுவான குறைந்தபட்ச ஊதியம் 1,700 ரிங்கிட்டிலிருந்து 2,000 ரிங்கிட் ஆகவும், புதிய பட்டதாரிகள் மற்றும் பகுதியளவு திறன் பெற்ற தொழிலாளர்களுக்கு மாதம் 2,500 ரிங்கிட் எனவும் அறிவிக்கப்பட்டது.
--
நெகெரி செம்பிலான் செனாவாங் நெடுஞ்சாலையில், பணியிலிருந்த சாலைப் போக்குவரத்து அதிகாரி இருவர் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்த, அரச மலேசிய காவல் படையின் விசாரணைகளுக்கு JPJ முழு ஒத்துழைப்பு வழங்கும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் சட்ட மீறல், அல்லது அலட்சியம் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
அவ்விபத்தில், JPJ அமலாக்க உதவி அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்தார்.
--
நெகிரி செம்பிலானில், 9 பள்ளிகளில் கண்டெடுக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொட்டலங்களில் எந்தவொரு அபாயகரமான பொருட்களும் இல்லை!
மாறாக கோதுமை மாவும் தட்டுகளும் மட்டுமே இருந்தன என்பதைக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
--
பாகிஸ்தான் பள்ளிக்கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 13 வயதுக்கு உட்பட்ட 33 குழந்தைகள், ஒரு பெண் ஆசிரியர் என 34 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 19-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.