
அரச மலேசிய வான்படையை உட்படுத்திய போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில், மேலும் கைதுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அதிகாரிகள் மறுக்கவில்லை!
தற்காப்புப் படை தளங்களில் கட்டுப்பாடுகளை மேம்படுத்தும் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதோடு அரச மலேசிய வான்படையின் வசதிகளைப் பயன்படுத்தி, போதை பொருள் கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து காவல் துறை கடந்த ஜனவரியே சாரணையைத் தொடக்கிவிட்டது என்றது அவ்வமைச்சு.
இதனிடையே TUDMமின் அந்த போதை பொருள் கடத்தல் விவகாரம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து பேசப்படும் என்றும் அவ்வமைச்சு கூறியது.
--
பேராக், குவாலா கங்சாரில் மூன்றாம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, கல்வி அமைச்சு, தங்கும் விடுதியுடன் கூடிய பல்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்கிறது!
தங்கும் விடுதி நிர்வகிப்பு, மாணவர் நலன், நடப்பில் உள்ள விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அவ்வமைச்சு காவல் துறையுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
அம்மாதிரியான பள்ளிகளில் தங்கும் மாணவர்களின் ஆதரவை வலுப்படுத்த, துணை வாடன்கள் மற்றும் ஆலோசனை ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பரிசீலிக்கப்படுகிறது.
------
இதனிடையே குவாலா கங்சாரில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 13 வயது மாணவர் ஒருவர், தைப்பிங் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அவருக்கும், தங்கும் விடுதி மாணவர் உயிரிழப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைக் காவல் துறை உறுதிப்படுத்தியது.
------
குவாலா திரங்காணுவில் இணையத்தில் பார்த்த இல்லாத முதலீட்டுத் திட்டத்தை நம்பி, இல்லதரசி ஒருவர் ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் இழந்துள்ளார்.
-----
35 மலேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை Kuben Mahadevan, MACAI திரைப்படத்துக்காக வென்றுள்ளார்.
அதே வேளை சிறந்த அசல் கதை பிரிவில் Macai திரைப்படத்திற்காக இயக்குனர் Sun-J Perumal மற்றும் சிவனந்தம் பெரியன்னன் விருது வென்றனர்.
சிறந்த களைஞருக்கான சிறப்பு விருது மூத்த நடிகர் Suhan Pancha அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.