
மலேசியாவும் நேபாளமும் தங்கள் தொழிலாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையைச் சீரமைக்க ஒப்புக்கொண்டுள்ளன!
அதன் மூலம் தொழிலாளர் உரிமை மீரலுக்கு வழிவகுக்கக்கூடிய நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதோடு, மிகவும் ஒழுங்கான, வெளிப்படையான மற்றும் நேர்மை சார்ந்த செயல்முறையை உறுதிசெய்யவும் அது வழிவகுக்கும் என, மனிதவள அமைச்சர் Datuk Seri R. Ramanan தெரிவித்தார்.
சீரான மற்றும் வெளிப்படையான ஆட்சேர்ப்பு முறையின் அவசியத்தையும், தொழிலாளர்களுக்கு அதிக செலவுகளைச் சுமத்தும் அல்லது நேர்மையற்ற இடைத்தரகர்களின் தலையீடுகளைக் களைவதன் அவசியத்தை இரு நாடுகளும் உணர்ந்திருப்பதாக அவர் தனது Facebookகில் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் தொழில்துறைகள் மற்றும் தொழிலாளர் சந்தையின் உண்மையான தேவைகளைப் புறக்கணிக்காமல், நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நிர்வகிப்பதில் மலேசியா தொடர்ந்து கடப்பாடு கொண்டிருக்கும் என்றும், அமைச்சர் உறுதியளித்தார்.
-----
Whatsapp கணக்குகள் ஊடுறவப்பட்டு, பின்னர் நிரந்தரமாக முடக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து, அதன் தொடர்பில் META நிறுவனத்தைத் தொடர்புக் கொள்கிறது மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம்!
அப்பிரச்னையை சமூகவலைத்தளவாசி ஒருவர் MCMCயின் கவனத்திற்குக் கொண்டு வந்ததை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
-----
2027 வரவு செலவு அறிக்கையின் கீழ், அண்மைய உபகரணங்களைப் பெறும் தங்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என, நம்புகிறத் தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு!
நாட்டின் சிறப்பு தேடம் மீட்புப் பணிக்குழு SMART தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தம்மை வளர்த்துக் கொள்ள அது அவசியமாவதாக, NADMAவின் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
------
கடந்த ஐந்தாண்டுகளில் மூவாயிரத்துக்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு Halal சான்றிதழைப் பெற்றுத் தர தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு உதவியிருக்கிறது.
------
ஆகக் கடைசி தகவல்படி, சரவாக்கில் மட்டும் ஐந்து பகுதிகளில் மட்டும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது.