Skip to main content
ஊழியர் பற்றாக்குறையால் கிளினிக் மூடப்படுவதில்லை!

 

 

ஊழியர் பற்றாக்குறை காரணத்தால் இதுவரை எந்த சுகாதார கிளினிக்கும் மூடப்படவில்லை!

 

அவற்றின் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சையிலும் எந்த தடையும் ஏற்படவில்லை என, சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

எல்லா சுகாதார மையங்களிலும் பொதுமக்களுக்கான சேவை சுமூகமாக வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

 

சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையால் எந்தளவுக்கு சிகிச்சையும் சுகாதாரச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.

 

----- 

 

பொதுச் சேவை துறையினருக்கு Waze வழிகாட்டி செயலியைப் பயன்படுத்த தடை விதிக்க முடிவுச் செய்துள்ளது அரசாங்கம்!

 

அத்தடை உத்தரவு உடனடி அமுலுக்கு வர, தேசிய இணைய பாதுகாப்பு செயற்குழு கூட்டத்தில் முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

 

அரசாங்கத் தகவல்கள் மற்றும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் இஸ்ரேல் அரசால் தவறாகப் பயன்படுத்தப்படும் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

அதற்குப் பதிலாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் உருவாக்கிய Tuju செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என, அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

----- 

 

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பில், அந்தக் கூட்டணி நாடாளுமன்றத்துக்கு விளக்கமளித்த பின்னரே, மக்களவையில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை குறித்து முடிவெடுக்கப்படும்!

 

இதன் தொடர்பில் பெரிக்காத்தானுக்கு தாம் கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகவும், தகவல் கிடைத்தவுடன் அறிவிப்புகள் இருக்குமாயின் வெளியிடப்படும் என மக்களவைத் தலைவர் Tan Sri Johari Abdul. தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக கூட்டணி அமைப்பு விதிகளை மீறியதகக் கூறி, சங்கப் பதிவுத் துறை பெரிக்காத்தானின் பதிவை ரத்துச் செய்தது.

 

--

 

அடுத்த மாதம் நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், பாரிசான் நேஷனல் 21 தொகுதிகளிலும், பாஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஏழு தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன. 

 

இதன் தொடர்பான கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

------

இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு தீபகட்பத்தில் ரோன்97 மற்றும் உதவித் தொகை வழங்கப்படாத ரோன்95 ரக பெட்ரோல் விலை 30 சென் குறைகிறது!

உதவித் தொகை வழங்கப்படாத டீசல் விலை லிட்டருக்குப் பத்து சென் சரிந்துள்ளது.

RAAGA Aaha Siranta Isai!