Skip to main content
ஊழியரை வாக்களிக்க அனுமதிக்காத நிறுவனம் நடவடிக்கைக்குத் தயாராகவும்!

 

 

நாளை ஜொகூர் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க, முதலாளிகள் தொழிலாளர்களுக்கு உகந்த அவகாசத்தை வழங்க வேண்டும்! 

 

வாக்களிப்பதற்காக விடுப்போ, இடைவெளியோ எடுத்துக் கொள்ள சில வேலையிடங்களில் அனுமதி வழங்கப்படாதோ என சிலர் அச்சம் தெரிவித்து வருவதை அடுத்து, தேர்தல் ஆணையம் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது. 

 

1954 தேர்தல் குற்றச் சட்டத்தின் கீழ், தங்களின் ஊழியர்கள் ஜனனாயகக் கடமையை ஆற்ற, முதலாளிகள் இடமளிக்க வேண்டும் என SPR நினைவூட்டியது. 

 

வாக்களிக்கச் செல்லும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோ, அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதோ தவறு என்பதையும் SPR அறிவுறுத்தியது. 

 

-----  

 

இதனிடையே ஜொகூர் தேர்தல் தொடர்பில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் மூன்று புகார்களைப் பெற்றுள்ளது! 

 

அதில் ஒரு வேட்பாளரை உட்படுத்திய ஊழல் குற்றச்சாட்டும் அடங்கும் என, MACC தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். 

 

தேர்தலின் போது ஏற்படும் அதிகார துஷ்பிரயோகம் அல்லது ஊழல் குற்றங்கள் தொடர்பில், பொதுமக்கள் நேரடியாகவே புகாரளிக்க ஏதுவாக, ஜொகூரின் சில மாவட்டங்களில் MACCயின் செயல்பாட்டு அறைகள் திறக்கப்பட்டிருந்தன. 

 

------  

 

சிலாங்கூர், Bantingகில் உள்ள பள்ளி ஒன்றில் கத்தியால் சக மாணவியைக் குத்தியதாக நம்பப்படும் மாணவி மீது, இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது! 

 

விசாரணையின் போது அம்மாணவி குறிப்பிட்டிருந்த எல்லோரிடமிருந்தும், வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுவிட்டதாக, மாநில காவல் துறை தலைவர் தெரிவித்துள்ளார். 

 

அம்மாணவி நடப்பில் மன அழுத்தம் உள்ளிட்ட மனநல பிரச்னைக்கு ஆளாகியிருப்பதையும், காவல் துறை உறுதிச் செய்தது, 

 

------  

 

மலாக்காவில் உள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில், புறப்பாட நடவடிக்கையின் போது வரிசையில் நின்று கொண்டிருந்த ஆறாம் படிவ மாணவர் ஒருவர் மயங்கி விழுந்து பின்னர் உயிரிழந்துள்ளார். 

 

இருதியத்திற்கான தசைகளுக்கு ரத்தத்தை அனுப்பும் பாதையில் ஏற்பட்ட கோளாரே அம்மாணவன் உயிரிழக்கக் காரணம் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். 

 

-----  

 

தனது வீரர் ஒருவரை உட்படுத்திய பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பில் அரச மலேசிய தரைப்படை விசாரணையைத் தொடக்கியிருக்கிறது  

 

RAAGA Aaha Siranta Isai!