Skip to main content
உலகளாவிய எண்ணெய் விலையில் கடுமையானச் சரிவு !

 

அமெரிக்கா ஈரான் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிவு கண்டுள்ளன ! 

கச்சா எண்ணெய் விலை சுமார் 13 விழுக்காடு சரிந்து, ஒரு பீப்பாய் 95 டாலருக்கும் கொஞ்சம் குறைவாக உள்ளது. 

என்னதான் சரிவு காணப்பட்டாலும், போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த விலையை விட தற்போதைய விலைகள் சுமார் 30 விழுக்காடு அதிகமாகவே உள்ளன. 

-- 

இதனிடையே, Hormuz நீரிணை வழியாக இரு வாரங்களுக்கு பாதுகாப்பான பயணம் அனுமதிக்கப்படுகிறது ! 

ஆனால், அது ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது. 

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டால், ஈரான் மீதான தனது தாக்குதல்களை இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்போவதாக டிரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார். 

-- 

இவ்வேளையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான, போர் நிறுத்த அறிவிப்பைப் பிரதமர் வரவேற்றுள்ளார். 

ஈரானுக்கு மட்டுமல்ல,அது மத்திய கிழக்கு பகுதிகளுக்கும் அமைதியை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கியமான முன்னேற்றப் படி என அவர் விவரித்தார். 

-- 

தலைநகர் Cheras-சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கேளிக்கை மையம் ஒன்றில் ஏற்பட்ட கலவரம் குறித்த விசாரணைகளுக்கு உதவ காவல் துறை 12 பேரை கைது செய்துள்ளது. 

அச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வாகனங்களும், வளாகத்தின் நுழை வாயிலை மோதி உடைக்கப் பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

-- 

சிலாங்கூர், கோலா லங்காட் அருகே உள்ள ஆலயம் ஒன்றில், நேற்று மர உத்திரம் விழுந்ததில் 17 வயது சிறூமி உயிரிழந்தார். 

 

 

RAAGA Aaha Siranta Isai!