Skip to main content
உணவை வாங்கிக் குவிக்காதீர் !

 

அத்தியாவசிய உணவுப் பொருட்களை, பொதுமக்கள் முன்கூட்டியே அதிகளவில் வாங்கி சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை என, அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது !

மலேசியாவின் உணவுப் பொருள் விநியோகம் தொடர்ந்து நிலையாக இருப்பதாக விவசாய, உணவு உத்தரவாத அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான அரிசி, கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சு உறுதியளித்தது.

வடகிழக்குப் பருவமழை காலம் மற்றும் சூப்பர் எல் நினோ ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், அமைச்சு இதனை கூறியது.

---------

சூப்பர் எல் நினோ ஏற்படக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், மேக விதைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து பரிசீலிக்க, விவசாய, உணவு உத்தரவாத அமைச்சு தயாராக உள்ளது !

கெடா மாநிலத்தின் மூன்று முக்கிய அணைகளில் ஒன்றான Pedu அணையின் நீர்மட்டம், தற்போது திருப்திகரமான நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.

ஆயினும், விவசாயத் துறைக்குத் தேவையான நீர் விநியோகத்தை உறுதிப்படுத்த, அணையின் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்றும், அமைச்சு வலியுறுத்தியது.

--------

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஷா ஆலாம் மாநகர் மன்றத்தின் கீழ் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள், விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் !

இவ்வாண்டு நவம்பர் முதல் அடுத்தாண்டு ஜனவரி வரை, நாடு முழுவதும் மூன்று முதல் ஐந்து முறை தொடர் கனமழை பெய்யக்கூடும் என MBSA தெரிவித்துள்ளது.

---------

இதனிடையே, தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பெட்டாலிங் மாவட்டத்தில், Jalan Kubu Gajah-வில் Sungai Subang ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது !

--------

இவ்வேளையில், சிலாங்கூரில் வெள்ளத்தால் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். 

RAAGA Aaha Siranta Isai!